How To Use Milk on Face For Glowing Skin in Tamil
முகம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றோம். அதற்காக பார்லருக்கு சென்று அழகுப்படுத்தி கொள்கிறோம். நீங்கள் செயற்கையாக முகத்தை அழகுபடுத்துவது கொஞ்ச நேரத்திற்கு மட்டும் தான். நிரந்தரமாக முகத்தை பிரகாசமாக மாற்ற வேண்டும் என்றால் இயற்கையான வழி தான் சிறந்தது. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் இயற்கையான முறையில் முகத்தை எப்படி பளபளப்பாக்குவது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
முகம் பளபளப்பாக்க என்ன செய்ய வேண்டும்:
பால்:
டைரோசின் என்பது மெலனின் கட்டுப்படுத்தும் ஹார்மோன் சருமத்தை கருமையாக்குகிறது. பல சருமத்தில் உள்ள டைரோசினின் அளவை கட்டுப்படுத்தி சருமத்திற்கு பளபளப்பை தருகிறது. பளபளப்பான சருமத்தை பெறுவதற்கு பச்சை பால் சிறந்த தீர்வாக இருக்கும்.பச்சை பாலை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி கொள்ளலாம்.
பால் மற்றும் சர்க்கரை:
பச்சை பாலை சர்க்கரையுடன் சேர்க்கும் போது சருமம் பளபளப்பாக மாறும். பச்சை பால் சிறிதளவு, சிறிதளவு சர்க்கரை சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவி கொள்ளவும்.
சருமம் எப்போதும் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க இந்த Home Rremedy ட்ரை பண்ணுங்க ..!
பால் மற்றும் மஞ்சள்:
பச்சைப் பால் இரண்டு பெரிய அழகுக் கட்டுப்பாடுகளான கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் சருமத்தைப் பொலிவாக்குகிறது.
ஒரு கிண்ணத்தில் பச்சை பால் மற்றும் மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் குங்குமப்பூ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
பால் மற்றும் ரோஸ் வாட்டர்:
பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் முகப்பருவை எதிர்த்து போராடும் பண்பை கொண்டுள்ளது. மேலும் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குவதோடு சரும வறட்சியையும் தடுக்கிறது. முகப்பரு வராமலும் தடுக்கும்.
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி பால், அதனுடன் 1/2 தேக்கரண்டி முல்தானி மெட்டி சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். உங்களுடைய ஸ்கின் வறண்ட சருமமாக இருந்தால் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து கொள்ளவும்.
இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |