சருமத்தின் அழகை மேம்படுத்தும் பூந்திக்கொட்டை..!

Advertisement

How To Use Soap Nut For Face In Tamil

முகம் பொலிவாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று நம் பல்வேறு சோப்கள் மற்றும் Face Wash பயனப்டுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் சோப்பு எல்லாம் கெமிக்கல் கலந்ததாக தான் இருக்கிறது. நம் பாட்டிகள் காலத்திலே உபயோகித்த பூந்திக்கொட்டை பல்வேறு பயன்களை நமக்கு தருகிறது. பூந்திக்கொட்டையை தண்ணீரில் கலந்து பயன்படுத்தும் போது அது சோப்பை [போன்று செயல்படுகிறது. இது சரும பிரச்சனைகளை தீர்க்கிறது.

நாம் முகத்திற்கு உபயோகிக்கும் கெமிக்கல் சோப்களை விட இயற்கையான பூந்திக்கொட்டை சோப் நம் சரும ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இன்றைய பதிவில் பூந்திக்கொட்டை சோப்பை எப்படி பயன்படுத்துவது இதனால் கிடைக்கும் பயன்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

How To Make Herbal Shampoo At Home In Tamil

பூந்திக்கொட்டை சருமத்துக்கு எப்படி பயன்படுத்துவது:

பூந்திக்கொட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும். அதனுடன் பூந்திக்கொட்டை 5 சேர்த்துக்கொள்ளவும். இரண்டும் சேர்ந்து நன்றாக கொதிக்கும் போது, ஒரு கரண்டியை வைத்து பூந்திக்கொட்டையை நன்றாக குழைத்து கிளறி விட வேண்டும். இதனை கால் மணி நேரம் கொதிக்கவிட வேண்டும்.

பிறகு இதை மெல்லிய மஸ்லின் துணியில் வடிகட்டி விடவும். இதை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம். ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இயன்றால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை இதை பயன்படுத்தலாம்.

பூந்திக்கொட்டை சருமத்துக்கு ஈரப்பதம் அளிக்கிறது:

பூந்திக்கொட்டை பய்னபடுத்தும் போது சருமத்துக்கு இயற்கையாகவே ஈரப்பதம் கிடைக்கிறது. இதனால் சருமம் மென்மையாகவும் மாசுபடாமலும் இருக்கிறது. பூந்திக்கொட்டையை வறண்ட சருமம், எண்ணெய் சருமம், உணர்திறன் சருமம், காம்பினேஷன் சருமம் இருக்கும் அனைவருமே பயன்படுத்தலாம். பூந்திக்கொட்டை எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படாதது என்பதால் இதனை எல்லா வித சருமத்தினரும், எல்லா வித வயதினரும் பயன்படுத்தலாம்.

சருமத்தை சுத்தப்படுத்துகிறது:

பொதுவாகவே நாம் சோப் பயன்படுத்தும் போது சருமம் சுத்தமடைகிறது என்று நாம் எண்ணுவோம் ஆனால் இது தவறு. நாம் கெமிக்கல் கலந்த சோப் பயன்படுத்தும் போது சருமம் முழுதும் சுத்தம் அடைவதில்லை. இதுவே நாம் பூந்திக்கொட்டை பயன்படுத்தும் போது சருமத்தின் அடி வரை சென்று சருமம் முற்றிலும் சுத்தம் அடைகிறது.

சருமத்துக்கு நாம் பயன்படுத்தும் பலவகையான செயற்கை கிரீம்கள் சில நேரம் நம் சருமத்துக்கு வெப்பதன்மையை ஏற்படுத்தும். பூந்திக்கொட்டை சருமத்தை சுத்தப்படுத்துவதோடு சருமத்தை குளிர்வாகவும் வைத்திருக்கும்.

இயற்கை Face Wash:

முகத்தில் இருக்கும் சோர்வு மற்றும் அழுக்கு நீங்க பூந்திக்கொட்டை Face Wash நல்ல தீர்வாக இருக்கும். பொதுவாக Face Wash அனைத்து சருமத்தினரும் பயன்படுத்த இயலாது. ஒவ்வொரு சருமத்தினர் ஒவ்வொரு Face Wash பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த பூந்திக்கொட்டை Face Wash அனைத்து சருமத்தினருக்கு பயன்படுத்தலாம். இது எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.

சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்:

சருமத்தின் நிறம் மந்தமாகவோ அல்லது சிலருக்கு நிறம் குறைந்தோ இருக்கலாம். வெயிலினால் சருமத்தின் நிறம் பாதிக்கப்படலாம். உங்கள் சருமத்தின் ஒரிஜினல் நிறத்தை பெற பூந்திக்கொட்டை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது முகத்தில் இருக்கும் கறைகளையும் வடுக்களையும் கூட நீக்க கூடும். முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருப்பவர்கள் பூந்திக்கொட்டையை பயன்படுத்தலாம். இது உங்கள் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கும்.

சரும அலர்ஜி:

சருமத்தில் அழற்சி, சரும அரிப்பு, தடிப்பு பிரச்சனை, வீக்கம் போன்ற சரும நோய்கள் இருந்தால் அதை இயற்கையாக குணப்படுத்த பூந்திக்கொட்டை உதவும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  பயன்படுத்தலாம். சரும அல்ர்ஜிக்கு உதவும் என்பதால் இது குழந்தைகளுக்கு உண்டாகும் டயபர் சொரி வெடிப்புகளுக்கும் கூட பயன்படுத்தலாம்.

Homemade Shampoo in Tamil

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement