ஐஸ் கட்டி மசாஜ் | Ice Cube on Face at Night in Tamil
முகம் அழகாகவும், பொழிவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை உண்டு. சிலருக்கு அலைச்சல், தூக்கமின்மை, மாசுக்கள் போன்றவையால் சருமத்தின் பொழிவை இழந்து விடுகின்றோம். நாம் எவ்வளவு அழகு குறிப்புகளை பார்த்தாலும் கடைசில் நாம் எந்த ஒரு முயற்சியும் எடுப்பதில்லை. ஆனால் இந்த வெயில் காலத்தில் நாம் பல வகையான இன்ஸ்டன் கிரீம்களை முகத்தில் பூசி வருகின்றோம் இதனால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன தெரியுமா.? ரேஷஸ் (Rashes) தான். அதாவது பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்.
எனவே உங்கள் முகப்பொழிவுக்கான ஒரு தீர்வு ஐஸ் கட்டி தான். சிலருக்கு சைனஸ் பிரச்சனை இருக்கும் ஐஸ் கட்டியை முகத்தில் தேய்த்தால் சளி பிடிச்சிடும் என்று ஒரு அச்சம் இருக்கும். அதற்கு ஒரு வழி இருக்கு. ஐஸ் கட்டியை நேரடியாக முகத்தில் தடவாமல் அதனை ஒரு காட்டன் துணில் வைத்து முகத்தில் அப்லே செய்யலாம். இப்படி செய்வதால் சளி பிடிக்காது . எனவே நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.!
முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைய |
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு
- எலுமிச்சைச்சாறு
- வெள்ளரிக்காய்
- சர்க்கரை
- சோற்றுக்கற்றாழை
- ரோஜா இதழ்
முகம் பொலிவு பெற:
டிப்ஸ்:1
முதலில் சிறிதளவு உருளைக்கிழங்கை எடுத்து கொள்ளவும் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதன் வழவழப்பு தன்மை போகும் வரை தண்ணீரில் கழுவி எடுத்து வைக்கவும்.
இந்த கழுவிய உருளைக்கிழங்கை அரைத்து சாறுபிழிந்து ஐஸ் ட்ரேயில் வைக்கவும். இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி வந்தால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டமும் குறையும் அதன் பிறகு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முகத்தை பொழிவு பெற செய்கிறது.
ஐஸ் கட்டியில் உருளைக்கிழங்கில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் சருமத்தின் வளவளப்பை அதிகப்படுத்திக்கிறது. முகத்தில் உள்ள கரும் திட்டுக்களையும் சரி செய்கிறது.
டிப்ஸ் -2
அரை டி ஸ்புன் எலுமிச்சை சாறை எடுத்து கொள்ளவும். அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் டேப்லெட் கரையும் வரை கலக்கவும். வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் டேப்லெட் கலந்து வைத்ததை ஐஸ் ட்ரேயில் வைக்கவும்.
இதனை குளிப்பதற்கு முன்பு தடவி வந்தால் முகம் தங்கம் போல் மின்னும். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் சருமத்தில் உள்ள மருக்களை வேருடன் அழிப்பதற்கு பயன்படுக்கிறது.
அதுமட்டுமில்லாமல் சிலருக்கு சிறு வயதிலேயே முதுமை தோற்றம், முக சுருக்கம் ஏற்படும். அவர்கள் இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தினால் உங்களுடைய தோற்றம் அழகாக மாறிவிடும்.
டிப்ஸ் -3
வெள்ளரிக்காவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அதனை மிக்சியில் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.
மிக்ஸ் செய்த பேஸ் பேக்கை ஐஸ் ட்ரேயில் வைக்கவும். இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். காலை எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் கருமைகள் மறையும்.
வெள்ளரிக்காயில் 96 சதவீதம் நீர் சத்து இருப்பதால் முகத்தில் ஏற்பட கூடிய கருவளையங்களை நீக்க உதவுகிறது.
தக்காளி ஒன்றே போதும் முகத்தை பளிச்சென்று மாற்றிவிடும் |
டிப்ஸ் -4
சிறிதளவு சர்க்கரை அதில் தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். இந்த பேஸ் பேக்கை ஐஸ் ட்ரேயில் வைக்க வேண்டும். பிறகு முகத்தில் மிருதுவாக தேய்த்து வந்தால் மூக்கில் மேலும் அதன் ஓரத்திலும் உள்ள பிளாக்ஹெட்ஸ் (blackheads), வெண்புள்ளிகள் (whiteheads), போன்றவை இருந்த இடம் தெரியாமல் மாறிவிடும் .
டிப்ஸ் -5
சோற்றுக்கற்றாழையை சிறிதளவு எடுத்து அதன் தோள்களை நீக்கி நன்றாக கழுவவும். பின்பு மிக்சியில் அரைத்து அதன் சாறை எடுத்து கொள்ளவும். பின்பு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
கலந்த பேஸ் பேக்கை ஐஸ் ட்ரேயில் வைத்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் அழகாகவும் வளவளப்பாகவும் இருக்கும். இவை சருமத்தின் ஏற்படும் வேர்க்குரு மற்றும் முக வீக்கம் போன்றவற்றை குறைக்கும்.
அதுமட்டுமில்லாமல் சருமத்தை வெண்மையாக்கும் பண்புகளை உடையது.
டிப்ஸ் -6
புதிய ரோஜா இதழை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். பிறகு அதில் கொதிக்கவைத்த 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி ஊறவைக்கவும். ஊறவைத்த ரோஜா இதழ்களை வடிகட்டி அந்த தண்ணீரை ஐஸ் ட்ரேயில் வைக்க வேண்டும்.
இதனை முகத்தில் தடவ வந்தால் முகம் ரோஜா இதழ் போல மிருதுவாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு வாரம் வரை வைத்து கூட பயன்படுத்தலாம்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |