முகம் பளபளப்பாக இருக்க
முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கின்றனர். இருந்தாலும் இந்த வெயில் காலத்தில் எப்பொழுதும் இருப்பதை விட பொலிவிழந்து காணப்படும். இதனை தவிர்ப்பதற்காக கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் முகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக்குவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
முகம் பளபளப்பாக என்ன செய்ய வேண்டும்:
முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பலரும் யோசித்து கொண்டிருப்பீர்கள். இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தாதீர்கள். வீட்டில் உள்ள ஐஸ்கட்டி மற்றும் வெந்நீரை வைத்து முகத்தை பளபளப்பாக்குவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
வெந்நீர்:
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ரொம்ப கொதிக்க விட கூடாது, கையை வைக்கின்ற அளவிற்கு சூடி இருந்தால் போதும்.
சூடு வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும். பிறகு ஒரு டிஸ்ஸு பேப்பர் எடுத்து தண்ணீரில் நனைத்து பிழிந்து விட்டு முகத்தில் வைத்து கொள்ளவும். 30 நிமிடம் முகத்தில் அப்படியே இருக்கட்டும். ஒரு வேலை உங்கள் வீட்டில் டிஸ்ஸு இல்லையென்றால் ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த வெயில் காலத்திலும் உங்க முகம் பொலிவுடன் இருக்க கேரட்டை இப்படி பயன்படுத்துங்க..!
ஐஸ்கட்டி:
வெந்நீர் பேக்கை பயன்படுத்திய பிறகு ஐஸ்பேக் எடுத்து கொள்ளவும். இதை முகத்தில் பயன்படுத்தி மசாஜ் செய்யவும். நேரடியாக ஐஸ்கட்டியை முகத்தில் பயன்படுத்தாமல் ஒரு காட்டன் துணியில் உள்பக்கம் வைத்து விட்டு அதை பயன்படுத்தி மசாஜ் செய்யவும். இல்லையென்றால் ஐஸ்தண்ணீரை பயன்படுத்தி முகத்தை கழுவி கொள்ளவும். பிறகு ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி முகத்தை துடைத்து கொள்ளவும்.
ஐஸ் பேக் பயன்படுத்துவதால் முகத்தில் எரிச்சல் உணர்வை குறைக்கிறது. அலர்ஜி எதிர்ப்பு பண்புகளாகவும் செயல்படுகிறது. முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தோல்வெடிப்புகள் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.நீங்கள் முகம் பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும் என்று மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளை தினமும் இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |