Kaolin Clay Benefits for Skin in Tamil | Kaolin Clay in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கயோலின் க்ளே முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். கயோலின் க்ளே பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனை பற்றி முதலில் தெரிந்துகொள்வோம். முல்தானி மட்டி மட்டும் முகத்திற்கு பயன்படுத்தும் களிமண் அல்ல. அவற்றில் பல வகைகள் உள்ளது. அதாவது, பிங்க் க்ளே, யெல்லோ க்ளே, பிளாக் க்ளே என பல வகைகள் இருக்கிறது. இதில் ஒன்று தான் Kaolin Clay.
Kaolin Clay -வை நீங்கள் முகத்திற்கு பயன்படுத்தினால் அல்லது இனிமேல் தான் முகத்திற்கு பயன்படுத்த போகிறீர்கள் என்றால், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும்.? அதனை பயன்படுத்துவதால் முகத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் Kaolin Clay Benefits for Skin in Tamil பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
கயோலின் க்ளே முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய்யை உறிஞ்சுகிறது:
கயோலின் க்ளே ஆனது, முகத்திலுள்ள எண்ணெய் பிசுபிசுப்பை உறிஞ்சி, சருமத்தை எண்ணெய் பிசிபிசுப்பு இல்லாமல் வைத்து கொள்கிறது. கயோலின் க்ளே மிகச்சிறந்த மாய்ஸ்ச்சரைஸராக செயல்பட்டு சருமத்தை மென்மையாகவும் நீரேற்றமாகவும் வைத்து கொள்கிறது.
முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது:
கயோலின் க்ளே ஆனது, முகத்திலுள்ள அழுக்குகளை நீக்கி, முகத்தை பளபளப்பாக வைத்து கொள்கிறது. அதுமட்டுமில்லாமல், சருமத்தில் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. மொத்தத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.
முகம் வெள்ளையாக ஆலிவ் ஆயிலுடன் இதை கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள்.!
சருமத்தை மென்மையாக்குகிறது:
கயோலின் க்ளேயில் சருமத்தை மென்மையாகும் தன்மை உள்ளது. அதுமட்டுமில்லாமல், பூச்சு கடி, தோல் வெடிப்பு போன்றவற்றால் சருமம் சிவந்து, எரிச்சல் ஊட்டும் தன்மையில் இருந்தால் எரிச்சலை நீக்குவதோடு சிவந்த சருமத்தையும் சரி செய்கிறது.
சரும நிறத்தை சீராக வைக்கிறது:
கயோலின் க்ளே ஆனது, சரும செல்களை தூண்டி, உங்கள் சரும நிறத்தை சீராக வைக்க உதவுகிறது.
முகத்திற்கு கயோலின் க்ளேவை எப்படி பயன்டுத்துவது.?
கயோலின் க்ளேவை முகத்திற்கு பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். அவற்றில் ஒரு சில வழிகள் பின்வருமாறு:
- கயோலின் க்ளேவை சிரிதளவு வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து, சிறிது நேரம் ககழித்து முகத்தை கழுவலாம்.
- சிரிதளவு கயோலின் க்ளேவுடன் 2 ஸ்பூன் மசித்த அவகேடோவை சேர்த்து, இதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து, 10 நிமிடங்கள் உலர விட்டு, அதன் பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
- சிரிதளவு கயோலின் க்ளேவுடன் 2 ஸ்பூன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலந்து, முகத்தில் அப்ளை செய்து , 10 நிமிடங்கள் உலர விட்டு, அதன் பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |