Karumpulli Maraiya Enna Seivathu
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தன்னை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இதற்காக கடையில் விற்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் உங்களுடைய முகத்தில் ரிசல்ட் வந்தாலும், நாளடைவில் முகத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்போ நான் என்ன செய்வது என்ற யோசனை இருக்கும். வீட்டிலையே கரும்புள்ளிகளை மறைக்க பேக் செய்யலாம் அது எப்படின்னு இந்த முழு பதிவை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
கரும்புள்ளிகள் வர காரணம்:
சருமத்தில் மெலனின் உற்பத்தியானது அதிகமாக இருப்பதால் கரும்புள்ளிகள் ஏற்படும்.
பருக்கள் ஏதும் இருந்தால் அவை நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறும்.
அதிக நேரம் நேரடியாக சூரிய ஒளியில் இருப்பதால் யுவி (UV) கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தி கரும்புள்ளிகளை உருவாக்கலாம்.
வயது அதிகரிக்கும் போது மெலனின் உற்பத்தியானது சரியான அளவில் சுரக்காமல் கரும்புள்ளிகள் வரக்கூடும்.
பெண்களுக்குள் கர்ப்பம், மாதவிடாய் சுழற்சி, PCOS, மற்றும் பிற ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சருமத்தில் கரும்புள்ளிகள் வரலாம்.
விட்டமின் C, E, மற்றும் இரும்புச் சத்து போன்ற சத்துக்கள் குறைவாக இருந்தால் சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றும்.
கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதால் கரும்புள்ளிகள் ஏற்படலாம்.
மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனை காரணமாக சருமத்தில் மெலனின் உற்பத்தியை பாதிக்க செய்து முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படலாம்.
கஸ்தூரி மஞ்சள் பேக்:
முதலில் ஒரு கிண்ணத்தில் கஸ்தூரி மஞ்சள் 1/2 தேக்கரண்டி, பசும்பால் 1 தேக்கரண்டி, கடலை மாவு 1 தேக்கரண்டி, தயிர் 1 தேக்கரண்டி, லெமன் ஜூஸ் 1/2 தேக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பேஸ்ட்டாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த பேக்கை தடவுவதற்கு முன் முகத்தில் நன்றாக கழுவ வேண்டும். அதன் பிறகு ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கலந்து வைத்த பேஸ்ட்டை முகத்தில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். இதனை 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை முகத்தில் வைத்திருக்க வேண்டும். பிறகு சாதாரண நீர் அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
எப்போது பயன்படுத்தலாம்.?
இந்த பேக்கை வாரத்தில் 2 அல்லது 3 முறை பயன்படுத்தலாம். இரவு நேரத்தில் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். இந்த பேக்கை வாரத்தில் இரண்டு முறை என்று 4 வாரத்திற்கு பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
முகத்தில் கருமை நிறத்தை நீக்கி அழகு தரும் சார்கோல் சோப்
குறிப்பு: உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் இந்த பேக்கை கையில் சிறிதளவு தடவி விட்டு அதனால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றால் முகத்தில் தடவுங்கள்.
கரும்புள்ளிகள் வராமல் தடுப்பது எப்படி.?
- சூரிய கதிர்களிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.
- ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகள், B12, வைட்டமின் C, மற்றும் E உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
- கெமிக்கல் நிறைந்த பொருட்களை தவிர்த்து விட்டு இயற்கையான கிரீம்களை பயன்படுத்துங்கள்.
- தூக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம். ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியமானது.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |