Karuvalayam Poga Tips Tamil
இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து துறைகளிலும் கணினியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. அதனால் அனைவருமே கணினியை பயன்படுத்தி தான் வேலை பார்க்கின்றோம். அப்படி நாம் பயன்படுத்தி வேலை பார்க்கும் கணினியில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் காரணமாக நமது கண்களுக்கு அதிக அளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் பல வகையான பாதிப்புகளில் ஒன்று தான் கருவளையங்கள். நாமும் இந்த கருவளையங்களை போக்க பல வகையான கிரீம் மாற்று ஆயில் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவோம். அப்படி நாம் பயன்படுத்தும் கிரீம் மற்றும் ஆயில் போன்றவை நமக்கு நல்ல பலனை சில நாட்களுக்கு அளிக்கும். ஆனால் நிரந்தர தீர்வை அளிக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் நிரந்தரமாக கருவளையங்களை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
How to Remove Dark Circles at Home Naturally in Tamil:
இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை நிரந்தரமாக போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- ஆவாரம்பூ பொடி – 2 டேபிள் ஸ்பூன்
- மைசூர் பருப்பு பொடி – 2 டேபிள் ஸ்பூன்
- பாதாம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
- உருளைக்கிழங்கு – 1/2 கிழங்கு
கண்களை சுற்றியுள்ள கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 உருளைக்கிழங்கினை அதனின் தோலினை நீக்கி சேர்த்து கொள்ளவும். இதனை நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள்.
ஆவாரம்பூ பொடியை சேர்த்து கொள்ளவும்:
பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் ஆவாரம்பூ பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
கண்களில் கருவளையம் வராமல் தடுப்பதற்கு இதை ஒருமுறை செய்து பார்த்தேலே போதும்
மைசூர் பருப்பு பொடியை கலந்து கொள்ளவும்:
அடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு பொடியை கலந்து கொள்ளுங்கள்.
பாதாம் எண்ணெயை கலக்கவும்:
பின்னர் அதில் நாம் எடுத்து வைத்திருந்த பாதாம் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
கற்றாழை ஜெல்லினை சேர்க்கவும்:
இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லினையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மூடி போட்ட கண்ணாடி அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
இதனை தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னால் உங்கள் கண்களை சுற்றி தடவி அடுத்த நாள் காலையில் நன்கு குளிர்ச்சியான தண்ணீரை பயன்படுத்தி உங்கள் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
இதனை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் மறைய ஆரம்பிப்பதை காணலாம்.
உங்க முகத்தில் பருக்கள் அதிக அளவு உள்ளதா அப்போ இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்க போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |