கருவேப்பிலை ஹேர் டை செய்முறை – Karuveppilai Hair Dye
இன்றைய கால கட்டத்தில் டீன் ஏஜ் வயதினருகே நரை முடி பிரச்சனை அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஒழுங்கற்ற உணவு முறை, ஒழுங்கற்ற கூந்தல் பராமரிப்பு, சத்து குறைபாடு என்று பல வகையான காரணங்களை சொல்லலாம். சரி இந்த நரை முடியை கருமையாக மாற்றுவதற்கு ஒரு அருமையான இயற்கை ஹேர் டை தயார் செய்யும் முறையை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க. இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்துவதினால் நரை முடி முழுமையாக மறைந்து விடும், குறிப்பாக வாரத்தில் ஒரு முறை மட்டும் அப்ளை செய்தால் போதும். சரி வாங்க இந்த ஹேர் டை எப்படி தயார் செய்யலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- கருவேப்பிலை – ஒரு கட்டு
- கற்றாழை ஜெல் – இரண்டு ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க முடி வெறித்தனமா வளர இந்த ஒரு பொடி மட்டும் போதும்..!
செய்முறை – Karuveppilai Hair Dye:
அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் ஒரு கட்டு கருவேப்பிலையை உருவி போட்டு நன்றாக கருகும் வரை வருது எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதனை நன்கு ஆறவைத்து மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல் அரைத்து கொள்ளவும்.
பின் அரைத்த கருவேப்பிலையை ஒரு வடிகட்டிய பயன்படுத்தி நன்றாக சலித்துக்கொள்ளவும்.
இவ்வாறு சலித்த கருவேப்பிலை பவுடரில் இரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு பவுலில் போட்டுக்கொள்ளவும்.
பின் அதனுடன் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். அவ்வளவு தான் கருவேப்பிலை ஹேர் டை தயார்.
இதனை தலையில் நன்றாக அப்ளை செய்து 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின் ஒரு மணி நேரம் கழித்து தலை அலச வேண்டும். தலை அலசும் போது நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தலாம். அந்த ஷாம்பு ஹெர்பல் ஷம்பாக இருந்தால் மிகவும் சிறந்தது. இந்த ஹேர் டையை வாரத்தில் ஒரு முறை ட்ரை செய்து வந்தாலே போதும் நல்ல ரிசல்ட் தரும், கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
24 மணி நேரமும் உங்களின் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா..? அப்போ ஆரஞ்சு பழத்தோலை இப்படி பயன்படுத்துங்க போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |