ஒரு கை முளைக்கட்டிய வெந்தயம் போதும் 18 நாளில் உங்கள் முடி இப்படி வளரும்!

Advertisement

Katralai Hair Oil in Tamil

இன்றைய லைப் ஸ்டையில் பலர் இளம் வயதிலேயே பலவகையான உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கின்றன. அவற்றில் ஒன்று தான் முடி உதிர்வு பிரச்சனை. இந்த முடி உதிர்வு பிரச்சனை ஆண், பெண் என்று பேதம் பார்க்காமல் இருபாலருக்கும் இருந்து வருகிறது. அதிலும் திருமணம் வயதில் இருக்கும் ஆண்களுக்கு இளம் வயதிலேயே சொட்டை அல்லது வழுக்கை விழுந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒழுங்கற்ற வாழ்கை முறை மற்றும் உணவு முறையாகும். மேலும் தலை முடிக்கு கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதாகும். முடி உதிர்வு பிரச்சனை சரி செய்ய கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதில், நமது வீட்டில் மற்றும் வெளி இடங்களில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி முடியை பராமரிக்கலாம்.

அந்த வகையில் வெந்தியதை பயன்படுத்தி ஒரு அருமையான கூந்தல் எண்ணெயை தயார் செய்வோம்.. இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தும் போது தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். அதாவது தலை முடி உதிர்வு, சொட்டை, வழுக்கை. இளநரை, நுனி முடி வெடிப்பு போன்ற பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். சரி வாங்க இப்பொழுது எண்ணெய் தயார் செய்யும் முறையை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • கற்றாழை – ஒரு மடல்
  • வெந்தயம் – 1 1/2 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 150 மில்லி
  • விளக்கெண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • பாதாம் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • வைட்டமின் ஈ கேப்சூல் – 1

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 தலைமுடி நுனியில் உள்ள வெடிப்புகள் மறைய டிப்ஸ்..!

வெந்தயம் மற்றும் கற்றாழை கூந்தல் எண்ணெய் செய்முறை:

முதலி 1 1/2 ஸ்பூன் வெந்தியதை தண்ணீரில் அரைமணி நேரம் நன்றாக ஊறவைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு கற்றாழை மடலை எடுத்துக்கொள்ளுங்கள் அதன் நுனி பகுதியின் இரு புறமும் சிறிதளவு கட் செய்து சிறிது நேரம் அப்படியே வைத்திருங்கள், இப்படி செய்வதால் கற்றாழையில் இருந்து ஒருவிதமான மஞ்சள் நிறத்தில் திரவம் வரும், அந்த திரவம் முழுவதும் வெளியே வைத்ததும் கற்றாழையை நன்றாக சுத்தமாக கழுவி கொள்ளுங்கள்.

பின் கற்றாழையை மேல் படித்ததில் காட்டியுள்ளது போல் கட் செய்து கொள்ளுங்கள். அதாவது கற்றாழையை நாடு பகுதியில் கட் செய்து அதன் பிறகு அவற்றில் உள்பகுதியில் சிறு சிறு கோடுகளாக நீளமாகவும், அகலமாகவும் லேசாக கட் செய்து கொள்ளுங்கள்.

பின் மேல் படத்தில் காட்டியுள்ளது போல் ஊறவைத்த வெந்தியத்தை கற்றாழையில் வைக்க வேண்டும். பிறகு கற்றளியாயி ஏதாவது நுழை பயன்படுத்தி கட்டி விடுங்கள். அதன் பிறகு ஒரு கார்டன் துணியை வைத்து கற்றாழையை காற்று போகாத அளவிற்கு மூடிவிட வேண்டும்.

பின் இரண்டு நாட்கள் அப்படியே வைத்திருங்கள் இந்த இரண்டு நாட்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் லேசாக தண்ணீர் தெளித்து விடுங்கள். ஆனால் துணியை அகற்றிவிடக்கூடாது துணியின் மேல் தண்ணீரை தெளித்துவிடுங்கள்.

இரண்டு நாள் கழித்து கற்றாழையை திறந்து பார்த்தால் வெந்தயம் நன்றாக முளைகட்டி வந்திரும். இந்த வெந்தியதை வைத்து தான் நாம் இப்பொழுது எண்ணெய் தயார் செய்ய போகிறோம்..

முளைகட்டிய வெந்தியதை தனியாக ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோல் அந்த கற்றாழையையும் சிறு சிறு துண்டுகளாக சிறிதளவு கட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது அடுப்பில் ஒரு இரும்பு சட்டியை வைத்து அவற்றில் 150 மில்லி தேங்காய் எண்ணெயை ஊற்றவும் எண்ணெய் நன்கு கொதித்து வரும்பொழுது, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து முளைகட்டி வந்த வெந்தியதை அதில் சேர்த்து ஐந்து  நிமிடம் நன்கு கொதிக்கவிடவும், பின் கற்றாழையை அதில் சேர்த்து திரும்பவும் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 வெள்ளையாக இருக்கும் தலை முடியில் இதை மட்டும் தடவுங்க அப்புறம் எப்படி இருக்குனு பாருங்க

பிறகு ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு வைட்டமின் ஈ கேப்சூலின் ஜெல்லை மட்டும் பிழிந்து அதனுடன் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஒரு நாள் முழுவது அப்படியே வைத்திருங்கள். பின் மறுநாள் அந்த எண்ணெயை வடிகட்டி தலைக்கு பயன்படுத்தலாம்.

இந்த எண்ணெயை பயன்படுத்த ஆரம்பித்த இரண்டு வாரங்களிலேயே உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதாவது முடி உதிர்வு பிரச்சனை நீங்கி முடி  நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும். இளநரை பிரச்சனை சரி ஆகும்.

குறிப்பு: 

ஆஸ்துமா, சைனஸ், குளிச்சியான உடம்பு உடையவர்கள் கண்டிப்பாக இந்த எண்ணெய்யை பயன்படுத்தவே கூடாது. மற்ற அனைவரும் பயன்படுத்தலாம்.

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement