தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை மட்டும் சேர்த்து தடவி பாருங்க..!

Advertisement

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் தயாரிப்பு  | Hair Growth Oil Homemade in Tamil

நண்பர்களே கடையில் கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கி தடவுவீர்கள். ஆனால்  இப்படி நிறைய எண்ணெய்களை மாற்றி மாற்றி தடவுவதால் உங்கள் முடி வளருவதை விட குறைவதுக்கு தான் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே கடையில் விற்கும் பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும்.

மேலும் நாம் எண்ணெய்களை வாங்கி தடவுவதன் மூலம் நமக்கு நிறைய முடிகொட்ட ஆரம்பிக்கும். அதேபோல் ஷாம்பு போட்டாலும் சரி சீயக்காய் போட்டாலும் சரி தண்ணீர் சேர்த்து குழைத்து அதன் பின் தலையின் அப்ளை செய்யவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Growth Oil Homemade in Tamil:

ஆவாரம்பூ: இதனை பயன்படுத்துவதன் மூலம் தலை முடி கொட்டுவதை நிறுத்தி முடி வளர்வதற்கு உதவி செய்யும்.

செம்பருத்தி பூ: வெள்ளைமுடி வளராமல் இருக்க உதவி செய்யும். 

வெட்டி வேர்: இது தலைமுடி வளர்ச்சிக்கு அதிகமாக உதவி செய்கிறது. இதில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது. வெயில் காலத்தில் அதிகமான சூடு ஏற்பட்டு தலை முடி கொட்டும். இதனை பயன்படுத்துவதன் மூலம் நல்ல மாற்றம் கிடைக்கும்.

சடாமாஞ்சி: இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனுடைய எண்ணெய்யை தடவி வருவதன் மூலம் முடி அடர்த்தியாக வளரும்.

கடுக்காய் தோல்: இதுவும் முடி வளர்வதற்கு பெரிய அளவில் உதவி செய்திறது.  

கருஞ்சீரகம்: இந்த கருஞ்சீரகம் தலைமுடியை கருப்பாக வளர்வதற்கு பெரிய அளவில் உதவி செய்கிறது.

பெரிய நெல்லிக்காய்: இது பற்றிய நன்மைகள் நமக்கு தெரியும். இதை நாம் தடவுவதன் மூலம் தலைமுடி வலிமையாக இருக்கும். 

வெந்தயம்: இது தலையில் இருக்கும் பொடுகை நீக்கும். அதேபோல் உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கும்.

இது தான் முடியின் ரகசியம்..! வாரம் ஒரு முறை மட்டும் ட்ரை பண்ணுங்க அப்புறம் பாருங்க உங்கள் முடி வளர்ச்சியை..!

செய்முறை:

 hair growth oil homemade in tamil

இப்போது முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் நாம் சுத்தமான தேங்காய் எண்ணெய் 1/2 லிட்டர் ஊற்றி அதனை மிதமான தீயில் வைத்து சூடு செய்யவும்.

சூடானதும் அதில் நாம் ஆவாரம்பூ சேர்க்கவும். அது சேர்த்தவுடன் நுரை வரும் உடனே அடுப்பை இன்னும் கூட மீடியம் பிலேமில் வைக்கலாம்.

அடுத்து அதில்  5 செம்பருத்திப்பூ சேர்க்கவும். அது கொஞ்ச நேரத்தில் ஒரு முறை கலந்துவிட்டு அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 2 பெரிய நெல்லிக்காய் வெட்டி நசுக்கி வைத்துள்ளேன் அதனையும் இதில் சேர்த்துக் கொள்ளவும்.

 hair growth oil homemade in tamil

அடுத்து 1 கைப்பிடி அளவு கடுக்காய் தோல் இதில் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்து பொருட்களையும் கருக்கவிடமால் வடிகட்டி எடுத்துக்கொள்வோம். அடுத்து எண்ணையை அடுப்பில் வைத்து அதில் 1 கைப்பிடி அளவு சடாமாஞ்சியை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்துக்கொள்ளவும். அடுத்து 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முடி அடர்த்தியாக வளர எண்ணெய்

அடுத்து 1 கைப்பிடி அளவு வெட்டி வேறை அதில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது அடுப்பை அணைத்துவிடவும். அப்படியே எண்ணெய் ஆறும் வரை அதில் ஊறட்டும். ஊறியதும் அதன் பின் அதனை பாட்டிலில் ஊற்றிக்கொள்ளவும். பின் நாம் கடைசியாக சேர்த்த பொருட்களை பாட்டிலில் போட்டு ஊறவைக்கவும். 3 நாட்கள் வரை அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு நீங்கள் தலையில் இதனை தடவி பாருங்கள். அதன் பின் உங்கள் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement