Kerala Skin Care Tips in Tamil
கேரள பெண்கள்தான் அதிக அழகுடன் இருக்கின்றனர் என்று ஆண்கள் பலரும் சொல்லுகின்றனர். கேரள பெண்களை போன்று நீங்களும் அழகாக விரும்புகின்றீர்களா? அவர்களின் அழகிற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா? அவர்கள் அழகை பராமரிக்க தினசரி என்னவெல்லம் செய்கின்றார்கள் என்றும் உங்களுக்கு தெரியுமா? இப்பதிவில் கேரள பெண்கள் தினசரி செய்கின்ற ஸ்கின் கேர் ரொட்டினை பற்றித்தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்!
குளியலுக்கு தேங்காய் எண்ணெய்:
கேரள பெண்கள் குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயினை முகம் மாற்றும் உடம்பு முழுவதும் தேய்த்து 1 மணிநேரம் நேரம் ஊற வைத்து பின் குளிக்கின்றனர். இவ்வாறு குளிப்பதனால் சருமமானது ஈரப்பதமாகவும், மென்மையாகவும் இருக்கின்றது.
கேரள பெண்கள் தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போதும் கூட ஒரு ட்ரிக்கினை பயன்படுத்துகின்றன. சோப்பினை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள். சோப்பினை சிறிதளவே கையில் எடுத்து பயன்படுத்துவர். காரணம் உடம்பில் உள்ள தேங்காய் எண்ணெய்யானது நீங்கிவிடாமல் உடல் மற்றும் சருமத்தில் இருக்கும்படி சோப்பினை குறைவாக பயன்படுத்துவர். தேங்காய் எண்ணெய் உடம்பை விட்டு முழுவதும் நீங்கும்படி சோப்பினை அதிகம் பயன்படுத்தமாட்டார்கள். இவ்வாறு செய்வதினால் சருமமானது அதிக நேரம் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் சருமமானது மென்மையாகவும் பள பளப்பாகவும் காட்சியளிக்கும்.
இதையும் படியுங்கள்=>கேரளா பெண்கள் முகம் போல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!
சருமம் பொலிவுக்கு முல்தானி மெட்டி மற்றும் சந்தனம்:
அழகினை அதிகரிக்க முல்தானி மெட்டி மற்றும் சந்தனம் இவற்றை கேரள பெண்கள் அதிகம் பயன்படுத்துக்கின்றனர். இவற்றை முகம் மற்றும் உடம்பு முழுவதுமே பயன்படுத்துகின்றனர்.
சந்தன கட்டிகளை கல்லில் உறைத்து சருமத்திற்கு பூசி வருகின்றனர். கெமிக்கல் கலக்காத தூய்மையான சந்தன கட்டிகள் மற்றும் சந்தன பவுடர்களை சருமத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
முல்தானி மெட்டி பயன்படுத்துவதினால் முகத்தில் பருக்கள் வருவது தடுக்கப்பட்டு முகமானது பிரகாசமாக இருக்கும்.
சந்தனம் பயன்படுத்துவதினால் முகத்தில் உள்ள Darkness, Pigmentation, Dark Spots, Dark Patches போன்றவை நீக்கப்பட்டு முகமானது அழகு பெறுகிறது.
அன்றாட உணவில் அதிக தயிர்:
கேரள பெண்கள் தினசரி அன்றாட உணவில் அதிக அளவு தயிரினை சேர்த்துக்கொள்கின்றனர் மேலும் மற்ற அசைவ உணவுகளை விட மீனைதான் அதிகமாக சாப்பிடுகின்றனர். இதுவும் இவர்களின் அழகிற்கு ஒரு காரணமாக அமைகின்றது.
ஸ்கரப்பிற்கு ஆயுர்வேத குளியல் நார்கள்:
தினசரி உடல் மற்றும் சருமத்திற்கு ஸ்கரப் செய்ய மூலிகை வேர்கள் கொண்டு தயாரிக்கப்படும் குளியல் நார்களை குளியலின்போது பயன்படுத்துகின்றனர். இதனால் சருமம் மற்றும் உடலில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அடியோடு நீக்கப்படுகிறது. முகமானது பளிச்சென்று காணப்படுகிறது.
இதையும் படியுங்கள்=> கேரளா பெண்கள் அழகின் இரகசியம் தேங்காய் எண்ணெய் என்று தெரியும்..! ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது..?
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |