கிராம்பு எண்ணெய்
இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கூந்தலுக்கும் சருமத்திற்கும் அழகு சேர்க்கக்கூடிய கிராம்பு எண்ணெய் பற்றி தான் பார்க்கப்போகிறோம். இனி நீங்கள் பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டாம். கடைகளில் சென்று சருமத்திற்கும் கூந்தலுக்கும் அழகு சேர்க்க அங்குள்ள பொருட்களை வாங்க வேண்டாம். 1 ரூபாய் கூட செலவு இல்லாமல் வீட்டில் இருந்தபடியே உங்களுடைய முகம் பளபளக்கவும் மற்றும் கூந்தல் அடர்த்தியாக வளரவும் கிராம்பு எண்ணெய் மிகவும் நல்ல பயனைத்தரும். அந்த எண்ணெய் தயாரிப்பது மற்றும் உபயோகப்படுத்துவது எப்படி என்று இன்றைய பதிவில் விரிவாக பார்த்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
கைகளில் கொள்ளாத அளவுக்கு முடி வளர்ச்சி அதிகமாக..! குப்பையில் எரியும் பொருள் போதும்
கிராம்பு எண்ணெய் பயன்படுத்தும் முறை:
பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிராம்பு எண்ணெயை சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தும் முறை எப்படி என்று கீழே பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சருமம் பளபளக்க:
உங்களுடைய சருமம் பளபளக்க மற்றும் பருக்கள் நீங்க 3 துளி கிராம்பு எண்ணெயுடன் 2 ஸ்பூன் அளவு தேன் சேர்த்து முகத்தில் மேலோட்டமாக தடவ வேண்டும். அதன் பிறகு 10 நிமிடத்திற்கு பின்னர் முகத்தை கழுவிடவேண்டும்.
கருவளையம் உடனே நீங்க:
முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் கருவளையம் என்பது ஒரு சிலருக்கு நீங்காத பிரச்சனையாக உள்ளது. ஆனால் இனி அந்த பிரச்சனை பற்றி கவலை படவேண்டாம். 2 துளி கிராம்பு எண்ணெய்க்கு 6 துளி தேங்காய் எண்ணெய் சேர்த்து கருவளையம் உள்ள இடத்தில் மேலோட்டமாக தடவ வேண்டும். இது மாதிரி செய்தால் போதும் முகத்தில் உள்ள கருவளையம் விரைவில் மறைந்துவிடும்.
முகத்தில் தழும்புகள் மறைய:
பருக்களால் ஏற்பட்ட தழும்பு மற்றும் எதாவது காயத்தினாலும் ஒரு சிலருக்கு தழும்பு முகத்தில் இருக்கும். அதனை போக்க கடைகளில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் தழும்புகள் மறையவில்லையென்றால் அப்போது நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் கிராம்பு எண்ணெயை பயன்படுத்துங்கள்.
கிராம்பு எண்ணெய்க்கு யுஜெனால் எனும் வேதி சருமம் காணப்படுகிறது. அதனால் இந்த கிராம்பு எண்ணெயை முகத்தில் தழும்புகள் மற்றும் தடிப்புகள் உள்ள இடத்தில் தடவினால் எளிதில் தழும்புகள் மறையும்.
தலைமுடி பொடுகு தொல்லை:
தலைமுடி நீளமாக இருக்கும் ஆனால் பொடுகு தொல்லை காரணமாக ஒரு சிலருக்கு முடி உதிர்வு ஏற்படும். ஆகவே பொடுகு தொல்லை குறைய கிராம்பு எண்ணெய் பயன்படுத்துங்கள். கிராம்பு எண்ணெயை நீங்கள் தலை அலசும் ஷாம்புவுடன் சேர்த்து அலசினால் போதும் பொடுகு பிரச்சனை நீங்கிவிடும்.
நீளமான முடி வளர:
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் பண்பு இந்த கிராம்பு எண்ணெய்க்கு உள்ளது. அதனால் உங்களுடைய முடி நீளமாக வளர கிராம்பு எண்ணெயுடன் நீங்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை சேர்த்து முடிக்கு தடவினால் போதும். விரைவில் மாற்றம்.
அதே போல் நீங்கள் தலைக்கு குளித்த பிறகு கிராம்பு எண்ணெயை தலையில் கண்டிஷனர் போல் பயன்படுத்தினால் உங்களுடைய முடி அடர்த்தியாக வளரும்.
முடி உதிர்வு நீங்க:
தலைமுடி உதிர்வு குறைய கிராம்பு எண்ணெயை நீங்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கூந்தலுக்கு பயன்படுத்தினால் போதும். இந்த எண்ணெயை தடவுவதனால் உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டத்தினை உறுதி செய்யும் பண்பு கொண்டது கிராம்பு எண்ணைய்.
நரை முடி கருப்பாக மாற எண்ணெய்:
நரை முடி பிரச்சனை நீங்க 3 ஸ்பூன் தைல எண்ணெய்க்கு 2 ஸ்பூன் கிராம்பு எண்ணெய் சேர்த்து வாரம் 3 முறை மசாஜ் செய்தால் போதும் நரைமுடி படிப்படியாக குறைந்து கருப்பு நிறமாக மாறிவிடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |