வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குப்பைமேனி இலை அழகு குறிப்புகள்.!

Updated On: January 27, 2026 5:42 PM
Follow Us:
kuppaimeni beauty tips in tamil
---Advertisement---
Advertisement

குப்பைமேனி இலை அழகு குறிப்புகள் | Kuppaimeni Beauty Tips in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், குப்பைமேனி இலை அழகு குறிப்புகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். குப்பைமேனி பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இது, அரிமஞ்சரி, பூனைவணங்கி, குப்பி மற்றும் மார்ஜலமோகினி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ மூலிகை செடி ஆகும். இதன் இலைகள் தண்டுகள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிகமாக வளரக்கூடியது.

தெரு ஓரங்களிலும், வயல் வரப்புகளிலும் அதிகமாக தானாக வளரக்கூடியது. குப்பை மேனி இலை ஆனது பெரும்பாலும், தோல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அடுத்ததாக, சரும அழகிற்கும் குப்பைமேனி இலை பயன்படுகிறது. இதில் ஆல்கலாய்டுகள், கேடாகோஸ், ஃப்ளவனாய்டுகள் பினொலிக் கலவைகள், சபோனின்கள் மற்றும் ஸ்டீராய்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. இது சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது. அதனை பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே, இப்பதிவினை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.

குப்பையில் கிடக்கும் குப்பைமேனியில் இவ்வளவு விஷயம் இருக்கா..?

குப்பைமேனி இலை அழகு குறிப்புகள்:

குப்பைமேனி இலை அழகு குறிப்புகள்

முகத்தில் உள்ள தேவையற்ற முடி உதிர:

மீசை முடி: பெண்களுக்கு உதட்டின் மேல், சின்ன சின்னதாக மீசை முடி இருக்கும். இது அவர்களின் முக அழகையே கெடுக்கும். ஆகையால், குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து, நன்றாக அரைத்து பேஸ்ட் போல் உதட்டின் மேல் உள்ள மீசை முடியில், இரவு தூங்கும்போது அப்ளை செய்து வர வேண்டும்.

தொடர்ந்து ஒருவாரம் அல்லது இரண்டு வாரம் இவ்வாறு செய்து வந்தால் மீசை முடி மற்றும் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும்.

முகத்தில் உள்ள முடி நீங்க: குப்பைமேனி இலை பொடி 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் மற்றும் தேன் 1 ஸ்பூன் சேர்ந்து நன்றாக கலந்து முகத்தில் முடி இருக்கும் இடங்களில் அப்ளை செய்து 20 நிமிடம் அல்லது 30 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக அழுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.

வாரத்தில் மூன்று நாட்கள் இதனை பயன்படுத்தி வந்தால் எளிதில் முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.

பளிச்சென்ற முகத்திற்கு குப்பைமேனி:

குப்பைமேனி பொடி 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் மற்றும் அரிசி நீர் தேவையான அளவு சேர்த்து பேஸ்டாக கரைத்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து தண்ணீர் கொண்டு கழுவி வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள், கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.

குப்பைமேனி இலையின் தீமைகள் பற்றி தெரியுமா.?

முகப்பருவை போக்க குப்பைமேனி:

குப்பைமேனி பொடி 1 டீஸ்பூன், வேப்பிலை பொடி டீஸ்பூன், துளசி பொடி 1 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள முகப்பரு நீங்கி விடும்.

கருவளையம் நீங்க குப்பைமேனி:

குப்பைமேனி இலை அல்லது குப்பைமேனி பொடியுடன் சிறிதளவு கற்றாழை ஜெல் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து பேஸ்டாக கலந்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருவளையம், பருக்கள் போன்றவை நீங்கி முகம் அழகாக இருக்கும்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now