அழகை அதிகரிக்க வெண்டைக்காயை இப்படி ட்ரை பண்ணுங்க (Ladies finger face pack benefits in tamil)..!
Ladies finger face pack benefits in tamil:- வெண்டைக்காயை நாம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதினால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வெண்டைக்காயை பற்றி நமக்கு இன்னும் தெரியாத சில விஷயங்களும் இருக்கிறது.
அதாவது வெண்டைக்காய் முகம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு மிகவும் பயன்படுகிறது. வெண்டைக்காயில் உள்ள விட்டமின் சி, முக வறட்சியை நீக்கி சருமத்தை என்றும் பொலிவுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
மேலும் வெண்டைக்காயில் உள்ள ஆன்டி பாக்டீரியா முகப்பருக்களை அகற்ற பயன்படுகிறது.
இவ்வாறு பல பலன்களை தரக்கூடிய இத்தகைய வெண்டைக்காயை (Ladies finger face pack benefits in tamil) பயன்படுத்தி சரும அழகை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.
![]() |
Ladies finger face pack benefits in tamil / whitening tips in tamil:-
தங்கம் போல் முகம் பொலிவுடன் இருக்க நான்கு அல்லது ஐந்து வெண்டைக்காயை எடுத்து சுத்தமாக அலசிக்கொள்ளவும். பின் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து மிக்சி ஜாரில் மைபோல் அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு பவுலில் மாற்றி அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் சருமம் பளபளப்பாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.
![]() |
Ladies finger face pack benefits in tamil:-
சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க, சரும செல்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சி அளிக்க இந்த பேஸ் பேக் பயன்படும். அதற்கு 4 அல்லது 5 வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின் வெண்டைக்காயை வடிகட்டி அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.பின் முகத்தை கழுவ வேண்டும்.
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதத்தினை வழங்கும். மேலும் சருமத்திலும் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை அழகாக வைத்து கொள்ளும்.
![]() |
ஓகே பிரண்ட்ஸ் வெண்டைக்காயை பயன்படுத்தி (whitening tips in tamil) சரும அழகை எப்படி அதிகரிக்கலாம் என்று தெரிந்து கொண்டீர்களா..
கண்டிப்பாக மேல் கூறப்பட்டுள்ள இரண்டு அழகு குறிப்பு(whitening tips in tamil) டிப்ஸில் ஏதேனும் ஒன்றை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சரும அழகை அதிகரிக்கலாம்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |