Lemon Oil Benefits In Tamil
இன்றைய பதிவில் எலுமிச்சை எண்ணெய்யின் பயன்கள் பற்றி பார்க்க போகிறோம். நம் அனைவருக்கும் எலுமிச்சை இலை மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவற்றில் அதிக நன்மைகள் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் எலுமிச்சை எண்ணெய்யை பற்றி தெரிந்திருக்க இயலாது. எலுமிச்சை அத்தியவசிய எண்ணெய் என்பது முற்றிலும் இயற்கையான மூலப்பொருள் ஆகும். இது வீட்டிற்கு சுகாதார மருந்தாகவும் கருதப்படுகிறது. எலுமிச்சை எண்ணெய் முதுமையான தோற்றத்தை தடுத்து இளமையான தோற்றத்தை தக்க வைக்கிறது. எலுமிச்சை தோளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எலுமிச்சை எண்ணெய் அதிக அளவிலான ஊட்டச்சத்தை கொண்டுள்ளது.இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள், விட்டமின் ஈ மற்றும் சி, கொழுப்பு அமிலங்கள் , சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளன.
இது உடலில் உள்ள ஃபிரிரேடிகல்களை எதிர்த்து போராடுகிறது. ஃபிரிரேடிகல் என்பது ரத்தம் மற்றும் திசுக்களில் பரவக் கூடிய நிலையற்ற மூலக்கூறு ஆகும். மேலும், எலுமிச்சை எண்ணெயை முகத்தில் தடவும் போது சருமத்தில் சேதமடைந்த திசுக்களை மீட்டுத்தர உதவுகிறது. 40 வயதிற்கு மேல் சருமத்தில் ஏற்படும் மங்கு மற்றும் சுருக்கம் போன்றவற்றை நீக்குவதில் எலுமிச்சை எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த எலுமிச்சை எண்ணெய் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க….
உச்சந்தலை அரிப்பு :

கூந்தல் அரிப்புக்கு முக்கிய காரணம் உச்சந்தலையில் ஏற்படும் வறட்சிதான். இதனால் கூந்தலில் ஈரப்பதம் குறைந்து தலைமுடி உதிர செய்கிறது. எலுமிச்சை எண்ணெய் வாரம் 2 முறை தலை முடியில் தடவி குளித்து வருவதன் மூலம் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு குறைந்து தலை முடியை ஈரப்பதமாக வைத்திருப்பதுடன் மட்டுமல்லாமல் முடி உதிர்வு ஏற்படாமல் தடுக்கிறது.
பொடுகு பிரச்சனையை கட்டுப்படுத்துகிறது:

தலைமுடியின் பராமரிப்பு குறையும் போது தலை முடியில் பொடுகு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். பொடுகு அதிகமாக இருந்தால் ஆடைகளில் உதிர்வது போன்ற பிரச்சனைகளை எற்படுத்த கூடும். இதனை கட்டுப்படுத்த எலுமிச்சை எண்ணெயை கூந்தலில் தடவி குளித்து வருவதன் மூலம் பொடுகு பிரச்சனையை சரி செய்ய முடியும்.
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் :

எலுமிச்சை எண்ணெய் சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது.இது முகத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றை தடுக்க உதவுகிறது.எலுமிச்சை எண்ணெய் முகத்தில் உருவாகும் நுண்ணுயிர்களை அழித்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பாதாம் எண்ணெய் மருத்துவ பயன்கள்
எலுமிச்சை எண்ணெயை யார் பயன்படுத்த கூடாது?
எலுமிச்சை எண்ணெய் பயன்படுத்துவது சிலருக்கு பிரச்சனையை ஏற்படுத்த கூடும்.ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள், தோள் அழற்சி பிரச்சனை இருப்பவர்கள் மற்றும் அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் குழந்தைகள் போன்றவர்கள் எலுமிச்சை எண்ணெயை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |














