எலுமிச்சை தோல் பயன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு..!
Lemon peel benefits in tamil / எலுமிச்சை தோல் பயன்கள்: உலகம் முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்க கூடிய ஒரு சிறந்த பழம் எலுமிச்சை பழம்.
குறிப்பாக எலுமிச்சை சாற்றில் உள்ள சத்துக்களை விட, எலுமிச்சை தோலில் வைட்டமின் சி மற்றும் ஏ, கால்சியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.
எலுமிச்சை தோல் ஆரோக்கியம் மற்றும் அழகு சாதன பொருட்களுக்கு அதிகம் பயன்படுகிறது.
சரி இப்போது எலுமிச்சை தோல் பயன்கள் பற்றி சிலவற்றை இங்கு நாம் காண்போம் வாங்க.
எலுமிச்சை தோல் பயன்கள் (Lemon peel benefits) – சருமம் பொலிவு பெற:
இந்த எலுமிச்சை தோல் சருமத்திற்கு நல்ல பிளிச்சிங் தன்மையை கொடுக்கும் என்பதால். எலுமிச்சை தோலை வெயிலில் நன்கு காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
பின்பு அந்த பொடியுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொரு ஸ்பூன் கலந்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்பு 10 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமம் பொலிவுடன் காணப்படும். குறிப்பாக சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் கருமைகளும் மறைந்துவிடும்.
எலுமிச்சை தோல் பயன்கள் (Lemon peel benefits) – நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைய:
சிலருக்கு நகம் மஞ்சள் நிறமாக காணப்படும், அவர்கள் நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்த பின்பு எலுமிச்சை தோலால்(எலுமிச்சை தோலின் பயன்கள்), நகங்களின் மேல் 30 வினாடிகள் தேய்த்த பின்பு கழுவ வேண்டும்.
இவ்வாறு 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும். இதே போல் பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்தால், பற்களில் உள்ள மஞ்சள் நிறம் நாளடைவில் மறையும்.
எலுமிச்சை தோல் பயன்கள் (Lemon peel benefits) – உடல் எடை குறைய:-
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எலுமிச்சை தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த பவுடரை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வாருங்கள். இவ்வாறு செய்வதினால் உடல் எடை நாளடைவில் குறைய ஆரம்பிக்கும்.
எலுமிச்சை தோல் பயன்கள் (Lemon peel benefits) – முகத்தில் உள்ள பருக்கள் மறைய:-
சிலருக்கு முகத்தில் அடிக்கடி முகப்பருக்கள் தோன்றும், இந்த முகப்பருக்கள் நமக்கு வராமல் இருக்க எலுமிச்சை தோல் மிகவும் உதவுகிறது.
இரண்டு எலுமிச்சை பழத்தின் தோலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றை மிக்ஷி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.
பின்பு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் அரைத்த எலுமிச்சை தோலை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.
பிறகு மசாஜ் செய்யுங்கள், மசாஜ் செய்த பிறகு 2 மணி நேரம் வரை காத்திருக்கவும், பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதினால் முகப்பருக்கள் மறையும். மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்திற்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும்.
எலுமிச்சை தோல் பயன்கள் (Lemon peel benefits) – கரும்புள்ளிகள் மறைய:
கரும்புள்ளிகள் மறைய வெயிலில் காயவைத்து பொடி செய்த எலுமிச்சை பொடியில்(lemon thol benefits in tamil) ரோஸ் வாட்டர், தயிர், ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்பு முகத்தில் தடவலாம். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |