Lentil Face Beauty in Tamil
நம்முடைய முன்னோர்கள் எல்லாம் உடலில் பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் இயற்கையான முறையை தான் கையாண்டார்கள். மேலும் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளை எடுத்து கொண்டார்கள். அதனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் முடி மற்றும் அழகில் இரண்டிலும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனை சரி செய்வதற்கு ஆங்கில மருந்துகளை எடுத்து கொள்கிறீர்கள். ஆனால் இயற்கையான முறையை கையாண்டால் நல்ல ரிசல்ட்டை பெற முடியும். அந்த வகையில் எல்லா வீட்டிலும் இருக்க கூடிய துவரப்பருப்பை வைத்து எப்படி அழகை மேம்படுத்தலாம் எப்படி அறிந்து கொள்வோம் வாங்க..
கரும்புள்ளி, தேமல்:
துவரப்பருப்பு ஆனது உடல் ஆரோக்கியம் மற்றும் சமையலுக்கு மட்டும் பயன்படுகிறது என்று நினைத்து கொண்டீர்கள் என்றால் அது தவறான விஷயம். ஏனென்றால் இதனை தோல், தலைமுடி, பாதம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைக்ளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
துவரப்பருப்பு 200 கிராம், பச்சை மஞ்சள் சிறிய துண்டு எடுத்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் கரும்புள்ளி மற்றும் தேமல் இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதன் மூலம் கரும்புள்ளி மற்றும் தேமல் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
தேவையில்லாத முடி:
பெண்களுக்கு உதட்டில் மேல் இருக்கும் முடி ஆனது சில பேருக்கு முக அழகை கெடுக்கும். இதனை சரி செய்வதற்கு பார்லர் சென்று முடியை ரிமூவ் செய்வார்கள். இதன் மூலம் கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் முடி வளர ஆரம்பித்து விடும்.
இதற்கு துவரம்பருப்பு -1/4 கிலோ, கோரைக்கிழங்கு – 100, கல்கண்டு – 50 கிராம் போன்றவற்றை பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை உதட்டிற்கு மேல் இருக்கும் முடியின் மேல் தடவி 10 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு கழுவ வேண்டும். இதன் போல் வாரம் ஒரு முறை என்று ஒரு மாதம் குளித்து வந்தால் இருந்த முடி எல்லாம் உதிர்ந்து விடும். மேலும் அந்த இடத்தில் முடியும் மறுபடியும் முளைக்காது.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் 1000..! |