வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முடி உதிர்வு, பொடுகு தொல்லை அனைத்தும் நீங்கி முடி நீளமாக வளர இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

Updated On: November 18, 2024 11:55 AM
Follow Us:
Long Hair And Hair Fall Oil Homemade in Tamil
---Advertisement---
Advertisement

Long Hair And Hair Fall Oil Homemade

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. ஆனால் பெண்களுக்கு எப்பொழுதும் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும்  வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு தலையில் பொடுகு பிரச்சனை இருக்கும். சிலருக்கு எவ்வளவு தான் முடியை பராமரித்தாலும் முடி உதிர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இதற்காக நாம் மற்றவர்களின் பேச்சை கேட்டு கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் இதனால் நல்ல பலன் நமக்கு கிடைக்காது. அதனால் இந்த தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் ஒரே தீர்வு தரும் எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Long Hair And Hair Fall Oil Homemade in Tamil:

  1. சின்ன வெங்காயம் – 15
  2. தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

வெங்காயத்தை எடுத்து கொள்ளவும்:

வெங்காயத்தை எடுத்து கொள்ளவும்

முதலில் 10 அல்லது 15 சின்ன வெங்காயத்தை எடுத்து கொள்ள வேண்டும். அதன் தோலை நீக்கி விட்டு அதை 2 பாதியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பின் ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். அதில் நாம் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போட்டு, அதில் 2 ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி பேஸ்ட் போல நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

உதிர்ந்த முடி அனைத்தும் வளர இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க போதும்..!

அடுப்பில் கடாய் வைக்கவும்:

அடுப்பில் கடாய் வைக்கவும்

பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் அரைத்து எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை போட வேண்டும். பின் அதில் 2 கப் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

அடுப்பை குறைத்து வைத்து இதை நன்றாக கலந்து விட வேண்டும். இது குறைந்தது 20 லிருந்து 30 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

வடிகட்டி எண்ணெய்யை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்

பின் இதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். எண்ணெய் ஆறியதும் அதை ஒரு துணியை வைத்து வடிகட்டி எண்ணெய்யை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.

போதும் போதும் என்று சொல்ற அளவுக்கு முடி வளர வேண்டுமா..? அப்போ இந்த எண்ணெயை தடவுங்க..!

 

அவ்வளவு தான் முடி பிரச்சனைக்கு தீர்வு தரும் எண்ணெய் தயார். இந்த எண்ணெயை தலை குளிக்கும் முன் தலையின் வேர் பகுதியில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடம் தலையில் வைத்திருந்து பின் நீங்கள் பயன்படுத்தும் சாம்பு அலல்து சீயக்காய் போட்டு தலையை அலசி கொள்ளவும்.

இதுபோல வாரத்திற்கு 2 முறை தலையில் அப்ளை செய்து குளித்து வந்தால் போதும். தலையில் முடி உதிர்வு, பொடுகு பிரச்சனை அனைத்தும் நீங்கிவிடும். முடி கொட்டுவது நின்று முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். இதை மட்டும் ட்ரை செய்து பாருங்க நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை