ஆண்கள் இப்படி தான் தலை குளிக்கிறீர்களா.! அப்போ விரைவில் வெள்ளை முடி வந்துவிடும்

Male Hair Care Tips in Tamil

வணக்கம் நண்பர்களே.! ஆண்கள் முடி பராமரிப்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால் திருமண வயது வரும் போது அல்லது திருமணத்தை பற்றிய பேச்சு நடக்கும்  போது தான் தலையில் முடியே காணும், முன் நெற்றி அசிங்கமாக தெரிகிறதே, கருப்பாக இருக்கிறோம் என்று நினைத்து கவலைப்படுவார்கள். அந்த நேரத்தில் கவலை பட்டு ஒரு பயனும் இல்லை. உங்களின் முடியை பராமரிப்பதற்காக பார்லர்க்கு போக சொல்லவில்லை. எந்த குறிப்பையும் பயன்படுத்த தேவையில்லை. நீங்கள் அன்றாடம் வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலே போதும். அது என்னென்ன என்று இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும்:

முதலில் உங்களின் உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறதோ அது போல் உங்களின் முடியும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு நீங்கள் சத்தான உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ ஆண்களுக்கான ஹேர் ஸ்டைல்..!

தினமும் தலை குளிக்க வேண்டும்:

தினமும் தலை குளிக்க வேண்டும்

பெரும்பாலானவர்கள் செய்கின்ற தவறு தலை குளிப்பது தான். வாரத்தில் மூன்று முறை அல்லது தலை குளிக்க வேண்டும் என்று நினைத்தால் குளிப்பார்கள். இப்படி செய்வது தவறான செயல். தினமும் தலை குளிக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் வேலை பார்க்கும் போது எப்படி உடல் வேர்க்கின்றதோ அது போல் தான் தலையிலும் வேர்க்கும். இதை நீங்கள் அப்படியே தலை குளிக்காமல் விட்டு விட்டீர்கள் என்றால் பொடுகு பிரச்சனை ஏற்படும். 

ஷாம்பு பயன்படுத்தும் முறை:

ஷாம்பு பயன்படுத்தும் முறை

வீட்டில் கிடைக்கின்ற ஷாம்பை பயன்படுத்தாமல் உங்களின் முடிக்கு ஏற்ற ஷாம்புகளை பயன்படுத்துவது அவசியமானது. முடிந்தவரைக்கும் ஒரே ஷாம்புகளை பயன்படுத்துங்கள்.

அடுத்து நீங்கள் தினமும் தலை குளிக்கிறீர்கள் என்றால் தினமும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்க்க கூடாது. ஏனென்றால் தினமும் ஷாம்பு பயன்படுத்தினால் விரைவில் வெள்ளை முடி தோன்றி விடும். மேலும் ஷாம்பு அப்ளை செய்வதற்கு முன் தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்க வேண்டும். அதனால் ஷாம்பு அப்ளை செய்வதற்கு முன் சிறிதளவு எண்ணெய் தடவிய பிறகு தலை குளியுங்கள். 

 முக்கியமாக நீங்கள் எந்த மாதிரியான ஷாம்பை அப்ளை செய்தாலும் அதை நேரிடையாக அப்ளை செய்யாதீர்கள். ஷாம்பை சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் கலந்த ஷாம்பை தலையில் தேய்த்து குளியுங்கள்.  

இதையும் படியுங்கள் ⇒ ஆண்கள் முகம் சிவப்பாக இயற்கை அழகு குறிப்புகள்..!

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil