அழகு குறிப்புகள் மணப்பெண் அலங்காரம்..!

மணப்பெண் அலங்காரம்

அழகு குறிப்புகள் மணப்பெண் அலங்காரம்..!

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்’ என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது என்பது மிக முக்கியமானது. சரி மணப்பெண் அலங்காரம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

மணப்பெண் அலங்காரம் –  மேக் அப் போடுவது எப்படி?

அழகு குறிப்புகள் மணமகள் அலங்காரம் குறிப்புகள்: 1

மாலையில் நடைபெறும் ரிசப்ஷனுக்கு சற்று அதிகமாகவும், காலையில் மிதமாகவும் மேப் அப் போட்டுக் கொள்ளுங்கள். திருமண நாளன்று அதிகமாக வியர்த்துக் கொட்டும். அதனால், கிரீம்பேஸ் மேக்அப்பை விட, பவுடர் மேக்அப் போடுவது நல்லது. மேக் அப் போடுவதற்கு முன் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்திற்கு ஒத்தடம் கொடுங்கள்.

அழகு குறிப்புகள் மணப்பெண் அலங்காரம் குறிப்புகள்: 2

அவரவர் நிறத்திற்கேற்ப பவுண்டேஷன், பவுடர், லிப்ஸ்டிக் போட வேண்டும். கண்களைச் சுற்றி ஐ-லைனர் வரையும் போது கலை நயத்துடன் வரைய வேண்டும். நிறத்திற்கேற்ப ‘ஐ-ஷேடோ’ வை தேர்ந்தெடுங்கள்.

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் செய்முறை!!!

அழகு குறிப்புகள் மணமகள் அலங்காரம் குறிப்புகள்: 3

மேக் அப் போடும்போது கழுத்து, கைகள் வரை ஒரே சீராக போடப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.

அழகு குறிப்புகள் மணமகள் அலங்காரம் குறிப்புகள்: 4

கன்னத்திற்கு போடப்படும் ‘ரூஜ்’ தனியாக சிவப்பாக தெரியாமல் முகத்தோடு ஒன்றிப் போக வேண்டும். இதைச் சரியாக செய்தால் பள்ளமாக உள்ள கன்னங்களைக் கூட சரி செய்திட முடியும்.

அழகு குறிப்புகள் மணமகள் அலங்காரம் குறிப்புகள்: 5

மெரூன் அல்லது பிரவுன் நிறத்தில் பொட்டு வைத்தால் போட்டோவில் பளிச் சென்று தெரிவீர்கள். மேலும் அழகூட்ட… பொட்டைச் சுற்றி கற்களால் டிசைன்கள் செய்து கொள்ளுங்கள்.

அழகு குறிப்புகள் மணமகள் அலங்காரம் குறிப்புகள்: 6

மேக்அப் செய்யும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து விட வேண்டும். நல்ல தரமான மேக் அப் பொருட்களையே பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், திருமண நேரத்தில் தோலில் அலர்ஜி ஏற்படும்.

கூந்தல் முடி 5 மடங்கு அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும் ..!

சிகையலங்காரம்:

மணப்பெண் தலை அலங்காரம் – அழகு குறிப்பு டிப்ஸ்:1

மணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம். முன்புறம் முகத்தின் மேற்புறம் சிகையலங்காரம் செய்வதற்கு ‘ப்ரண்ட் செட்’ என்று பெயர். இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புறம் தலையை அலங்கரிக்க வேண்டும்.

மணப்பெண் தலை அலங்காரம் – அழகு குறிப்பு டிப்ஸ்: 2

பின்னல் போட்டு மணப்பெண் தலை அலங்காரம் செய்து, பின்னலில் பூ வைப்பதற்கு பதில் ஜரிகை, முத்து, கற்களால் செய்யப்பட்ட அலங்கார பொருட்களை பயன்படுத்தலாம். பைப் பின்னல், ஐந்துகால் பின்னல், மேலே கொண்டை, கீழே பின்னல் போடுவது என்று பல வகைகள் உள்ளன.

மணப்பெண் தலை அலங்காரம் – அழகு குறிப்பு டிப்ஸ்: 3

கொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம், பருமன், கழுத்தின் உயரம் போன்றவற்றைக் கணக்கிட வேண்டும். குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கியவாறு கொண்டையும், நீளமான கழுத்துள்ளவர்களுக்கு கழுத்தை மறைக்கும் அளவில் கொண்டையை இறக்கியும் போட வேண்டும்.

மணப்பெண் தலை அலங்காரம் – அழகு குறிப்பு டிப்ஸ்: 4

முகம் நீளமாக உள்ளவர்களுக்கு காதுகளை மறைக்கும் விதத்தில் சிறிது முடியை எடுத்து சுருட்டி விடலாம். அகலமான முகத்தை உடையவர்கள் முடியைத் தூக்கிக் கட்ட வேண்டும்.

மணப்பெண் தலை அலங்காரம் – அழகு குறிப்பு டிப்ஸ்: 5

நடுவகிடு எடுத்து அதில் நெற்றிச் சுட்டியை அணியலாம். அல்லது காதின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு முடியை வாரி எடுத்துச் சென்று பின்குத்தி விட்டு, பின்னால் அழகாக கொண்டை போடலாம்.

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural Tips

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்..!