வாரம் 1 முறை இதனை தலையில் தேய்த்தால் போதும் 2 மடங்கு வரை முடி அடர்த்தியாக வளர செய்யும்..!

Advertisement

Mudi Adarthiyaga Valara Enna Seiya

ஆண்கள் மற்றும் பெண்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுமட்டும் இல்லாமல் பொதுவாக மனிதர்களுக்கு முடி என்றாலே ஒரு தனி அழகினையும் கொடுக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் முடியின் வளர்ச்சிக்கு கடையில் விற்கும் ஷாம்பு, ஹேர் பேக் மற்றும் ஹேர் ஆயில் போன்றவற்றை பயன்படுத்தி இருக்கோம். ஆனால் அத்தகைய பொருட்களில் எல்லாம் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான பலனை பெற முடியாது. சரி வேறு இதற்கு என்ன தான் செய்வது என்ற யோசனை பலருக்கு இருந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் இன்று முடி இயற்கையாக அடர்த்தியாக வளர என்ன செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி கருப்பாக அடர்த்தியாக வளர:

 how to get thicker hair naturally at home in tamil

முடி அடர்த்தியாக வளர செம்பருத்தி பூ பொடியுடன் மற்ற 2 இரண்டு பொருட்களை சேர்த்து ஹேர் பேக் தயார் செய்து அப்ளை செய்தால் போதும் முடி அடர்த்தியாக வளர்ந்து விடும். அதனை எப்படி தயாரிப்பது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  • கற்றாழை- 1 துண்டு
  • ஆளிவிதை- 4 ஸ்பூன்
  • செம்பருத்தி பூபொடி- 2 ஸ்பூன்
  • வெந்தயம்- 3 ஸ்பூன்

இதையும் படியுங்கள்⇒ உங்க உதடு எவ்வளவு கருமையாக இருந்தாலும், அதில் இதை மட்டும் தடவி பாருங்க..

How to Get Thicker Hair Naturally at Home:

ஸ்டேப்- 1

முதலில் எடுத்துவைத்துள்ள கற்றாழையினை சுத்தமாக தண்ணீரில் அலசி கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த கற்றாழையினை சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக சூடு வரும் வரை பார்த்து கொள்ளுங்கள். இப்போது அதில் ஆளிவிதை 4 ஸ்பூன் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப்- 3

அடுத்து கொதித்த ஆளி விதையுடன் நறுக்கி வைத்துள்ள கற்றாழை ஜெல்லினை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப்- 4

5 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தில் உள்ள ஜெல் ஆறியவுடன் அதனை ஒரு கரண்டியால் நன்றாக மசித்து கொண்டு பின்பு அந்த ஜெல்லை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 5

வெந்தயத்தில் முடியின் வளர்ச்சியினை அதிகரிக்கக்கூடிய எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. அந்த சத்துக்கள் அனைத்தும் முடியினை வளர்ச்சியினை வேரிலிருந்து வளர செய்கிறது.

ஆகையால் 3 ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் எடுத்துக்கொண்டு அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பவுடர் போல அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 6

இப்போது கிண்ணத்தில் உள்ள ஜெல்லுடன் 2 ஸ்பூன் செம்பருத்தி பூ பொடி, 2 ஸ்பூன் வெந்தயம் பொடி இரண்டினையும் சேர்த்து மீண்டும் ஒரு 2 கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் முடிக்கு ஹேர் பேக் தயார்.

இதையும் படியுங்கள்⇒ இரண்டு நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைக்க உருளைக்கிழங்கு மட்டும் போதும்..

எப்படி பயன்படுத்துவது..?

முடி கருப்பாக அடர்த்தியாக வளர

எப்போதும் முடிக்கு ஹேர் பேக் பயன்படுத்த போகிறோம் என்றால் முதலில் தேங்காய் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை முடியில் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து விட்டு 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

20 நிமிடம் கழித்து வழக்கம் போல தலை குளித்து விடுங்கள். வாரம் 1 முறை என இதை முடிக்கு அப்ளை செய்தால் போதும் முடி கருப்பாகவும் மற்றும் அடர்த்தியாகவும் வளரும். 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement