முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர
நம் முன்னோர்களின் காலத்தில் வயதானால் கூட தலைமுடி உதிராமலும், வெள்ளை முடி வராமலும், வழுக்கை தலை வராமலும் இருந்தனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே முடி உதிர்வு, வெள்ளை முடி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகி விளம்பரத்தில் வரும் ஹேர் ஆயில் மற்றும் ஷாம்பூ மற்றும் மருத்துவர்களை காண்பித்து பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த பதிவில் இயற்கையான முறையில் உதிர்ந்த இடத்தில் முடியை வளர செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நெல்லிக்காய் ஹேர் பேக்:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 500 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனுடனே நாம் நறுக்கி வைத்துள்ள 10 நெல்லிக்காய் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் 1 கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
பின்னர் அதனை அடுப்பிலிருந்து இறக்கி நன்கு குளிர விடுங்கள். பிறகு அதனை ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து 30 நாட்களுக்கு தடவி வாருங்கள் நீங்களே மாற்றத்தை காண்பீர்கள்.
ஆளி விதை ஹேர் பேக்:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 கப் தண்ணீரை ஊற்றி அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் ஆளி விதைகள், 2 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.
இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் 30 நாட்களில் உங்களின் தலையில் புதிய முடி வளர்வதை நீங்களே காணலாம்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |