5 நாட்களில் முடி நீளமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க முடி கொத்து கொத்தாக வளரும்..!

Advertisement

முடி நீளமாக வளர

முடி நீளமாக வளர என்ன செய்வது என்ற கேள்வி பலரிடத்தில் இருக்கிறது. முடி வளர வேண்டும் என்பதற்காக நிறைய வகையான எண்ணெய் மற்றும் ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்தி இருப்பார்கள். அதன் பிறகு அதற்கான பலன் கிடைக்கவில்லை என்று புலம்புவார்கள். ஏனென்றால் ஆண், பெண் இருவரில் யாராக இருந்தாலும் முடி என்றும் நீளமாக இருக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கும். உங்களுடைய ஆசை விரைவில் நிறைவேறுவதற்கு இன்றைய பதிவை முழுவதுமாக படித்து பயன்பெறுங்கள். மேலும் வீட்டில் இருந்த படியே முடி நீளமாக வளர என்ன செய்வது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ 2 நாட்களில் முகம் மட்டுமில்லை உடல் முழுவதும் ஜொலிக்க வைக்கலாம்

முடி நீளமாக வளர எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. வெந்தயம்- 2 ஸ்பூன் 
  2. கருஞ்சீரகம்- 2 ஸ்பூன் 
  3. தேங்காய் எண்ணெய்- 200 கிராம்

முடி வளர எண்ணெய் தயாரிக்கும் முறை:

mudi neelamaga valara tamil

தலை முடி நீளமாக வளர முதலில் எண்ணெய் தயார் செய்ய வேண்டும். எண்ணெய் எப்படி தயார் செய்வது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்தை போட்டு பவுடர் போல நன்றாக அரைத்து தனியாக சிறிய கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதேபோல 2 ஸ்பூன் வெந்தயத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் போல அரைத்து விடுங்கள். அதன் பிறகு வெந்தய பவுடரை அரைத்து வைத்துள்ள கருஞ்சீரக பவுடருடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது 200 கிராம் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொண்டு அதில் கலந்து வைத்துள்ள பவுடரை சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

கடைசியாக அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீரை நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீரில் கொதித்ததும் அதில் நீங்கள் கலந்து வைத்துள்ள தேங்காய் எண்ணெயை வைத்து எண்ணெய் கீழே ஊற்றாமல் பிடித்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 5

எண்ணெய் லேசாக சூடானதும் அடுப்பை அணைத்து விட்டு எண்ணெயை கீழே இறக்கி வைத்து விடுங்கள். அதன் பிறகு சிறிது நேரம் எண்ணெயை நன்றாக ஆற விடுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

எண்ணெயை அப்ளை செய்யும் முறை:

thalai mudi neelamaga valara

இப்போது நீங்கள் தயார் செய்த எண்ணெயை உங்களுடைய தலையில் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே வைத்து அதன் பிறகு வழக்கம் போல் தலை குளித்து விடுங்கள். இது மாதிரி வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி நீளமாக வளரும்.

இதையும் படியுங்கள் ⇒ ஒரே வாரத்தில் முகம் பளபளப்பாக இருக்க டிப்ஸ்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 

 

Advertisement