15 நாட்களில் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முடி நீளமாக வளர இந்த ஒரு எண்ணெய் போதும்..!

Advertisement

முடி நீளமாக வளர என்ன செய்வது

ஹாய் நண்பர்களே..! இன்றைய அழகு குறிப்பு பதிவில் 15 நாட்களில் முடி நீளமாக வளருவதற்கு வீட்டில் இருந்தே 1 ரூபாய் கூட செலவு செய்யாமல் எண்ணெய் தயாரிப்பது எப்படி தெரிந்துக்கொள்ள போகிறோம். அனைவருக்கும் முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக நிறைய செலவு செய்து இருப்பார்கள். அப்படி செலவு செய்தாலும் சிலர் முடி வளரவில்லை என்று கவலைப்படுவார்கள். இனி நீங்கள் இதுமாதிரி கவலை பட வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முடி நீளமாக என்ன செய்வது என்று பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ வெளியில் செல்வதற்கு முன் 1 நிமிடம் இந்த Facial செய்வதால் உங்கள் முகம் பளபளப்பாக மாறிவிடும்

முடி நீளமாக வளர எண்ணெய்:

முடி நீளமாக வளருவதற்கு எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • நெல்லிக்காய்- 1 பெரியது 
  • செம்பருத்தி இலை- 10
  • தேங்காய் எண்ணெய்- 1/2 லிட்டர் 
  • கறிவேப்பிலை- 2 கையளவு 
  • வெந்தயம்- 2 ஸ்பூன்

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியாக எடுத்து வைத்து கொள்ள்ளுகள். அதன் பிறகு செம்பருத்தி இலை மற்றும் கறிவேப்பிலையை இரண்டையும் சுத்தமான தண்ணீரிலில் அலசி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்ததாக ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் செம்பருத்தி இலை மற்றும் 2 ஸ்பூன் வெந்தயம் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது நெல்லிக்காயை எடுத்துக்கொண்டு அதில் இருக்கும் கொட்டையை வெளியே எடுத்து விட்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

கடைசியாக நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் மற்றும் 2 கையளவு கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து மிக்சி ஜாரில் இருக்கும் பொருட்களுடன் சேர்த்து கொஞ்சம் சொர சொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 5

இப்போது எண்ணெய் தயாரிக்க வேண்டும். அதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைய்யுங்கள். அடுத்ததாக அந்த பாத்திரத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெய் 1/2 லிட்டர் ஊற்றி எண்ணெய் கொதித்தவுடன் அரைத்து வைத்து இருக்கும் பேஸ்டை அதில் போட்டு 10 நிமிடம் நன்றாக கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப்- 6

10 நிமிடம் களித்ததும் எண்ணெயை கீழே இறக்கி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது நீங்கள் தயார் செய்த எண்ணெய் ஆறியவுடன் தினமும் அதை தலைக்கு தடவி வாருங்கள்.

15 நாட்களில் முடி நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு நீளமாகவும் அடர்தியாகவும் வளர்ந்து இருக்கும்.

இதையும் படியுங்கள் என்றென்றும் முகம் இளமையாக அப்படியே இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்கள்…!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement