What Causes Excessive Sweating On The Face? Some Ways To Prevent In Tamil
பொதுவாக எல்லாருக்குமே வியர்க்கும் ஆனால் சிலருக்கு முகத்தில் மட்டும் அதிகாமாக வேர்க்கும். அப்படி முகத்தில் அதிகமாக வேர்த்தால் முகம் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. உண்மையில் வியர்வை ஒரு நச்சு கிருமிகளை வெளியேற்றும் ஒரு சுரப்பி நிலை. இது சுரக்காவிடிலும் சிக்கல். அதிகமாக சுரந்தாலும் சிக்கல். இது உடம்பில் சுரந்தால் கூட வெளியில் தெரியாது. ஆனால் முகத்தில் அதிகப்படியாக வேர்வை சுரக்கும்போது அது உங்கள் அழகையே கெடுத்துவிடுகிறது. இதனை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் சிலர் அவதிப்படுவார்கள். இந்த பதிவில் முகத்தில் அதிகப்படியான வியர்வை சுரக்க காரணம் என்ன என்பதையும் அதனை தடுக்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
முகத்தில் அதிகப்படியான வியர்வை சுரக்க காரணம் :
உங்கள் உடல் அதிக வெப்பமாகும் போது தானாகவே ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி உண்டாகிறது. ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி தான் முகத்தில் அதிக வியர்வை வர காரணம். உடலில் அதிக வெப்பம் உண்டாகும்போது அதனை தணிக்க அதிகப்படியான வியர்வை சுரக்கிறது. முகத்தில் அதிகம் வியர்ப்பவர்களுக்கு தலையிலும் வேர்க்கும். காரணம் இந்த ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி முகம் மற்றும் தலையை தான் அதிகம் பாதிக்கிறது. சிலருக்கு மரபணு மூலமாகவும் முகத்தில் அதிகம் வேர்க்கும். சிலருக்கு அதிக உடல் பருமன் காரணமாகவும் வேர்க்கலாம். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும் இதுபோன்று முகத்தில் வேர்க்கலாம் என கூறப்படுகிறது.
முகத்தில் அதிகப்படியான வியர்வை வருவதை தடுப்பது எப்படி :
- சிலர் முகத்தில் அதிகப்படியான வியர்வதை வருவதை தடுக்க அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர். இது சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும். இருந்தும் நீங்கள் சாதாரணமாக உங்களுக்கு முகத்தில் வியர்வை வழிவது எதனால் என்பதை விரிவாக அறிந்துகொள்ள மருத்துவரை அணுகலாம். அல்லது நீங்கள் வீட்டிலே சில முறைகளை பயன்படுத்தியும் தடுக்கலாம். அவைகள் என்ன என்பதை கீழே தெரிந்து கொள்ளுங்கள்.
- அதிகப்படியான உடல்பயிற்சிகளை மேற்கொள்ளாதீர்கள். கடினமான உடல் பயிற்சிகளை மேற்கொள்ளுவதாலும் வியர்வை முகத்தில் சுரக்க செய்யும்.
- உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் உடல் வெப்பமாக இருக்கும்போது உடலை குளிர்ச்சியாக்க தன்னை தானே உடல் வியர்வை சுரக்க செய்யும். அதனால் முன்கூட்டியே நீங்களே உங்கள் உணவு முறைகள் மூலம் குளிர்ச்சியானவையை உண்டு குளுமையாக்கிக்கொள்ளுங்கள்.
- உங்கள் உடல் மற்றும் முகம் வியர்க்கும்போது நீங்கள் குளிக்கலாம் அல்லது முகத்தை அடிக்கடி குளிர்ச்சியான நீரில் கழுவும்போது வியர்வை வடிவதை தடுக்கலாம்.
- உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சத்து நிறைந்த பழங்கள் பழ சாறுகளை பருகலாம். இது உங்களை குளிர்ச்சியாக வைத்து வியர்வை வராமல் தடுக்கும்.
- உங்கள் முகத்தில் எண்ணெய் வடிதல் இருந்தாலும் முகத்தில் அதிகமாக வேர்க்கும். அதனால் உங்களுக்கு ஆயில் ஸ்கினாக இருந்தால் முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவுவது சிறந்தது.
அக்குள் வியர்வை துறுநாற்றத்தை போக்க இதை ட்ரை பண்ணுங்க..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |