முகத்தில் உள்ள மரு மறைய டிப்ஸ்
பொதுவாக உடம்பில் முகம், கழுத்து, அக்குள் பகுதி போன்ற இடங்களில் மரு ஏற்படும். ஆனால் முகத்தை தவிர இடங்களில் இருப்பது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் முகத்தில் இருப்பது அருவருப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் முகத்தில் அழகையே கெடுக்கும். இதற்கு என்ன தான் செய்வது என்று யோசித்துக்கொண்டிருப்பீர்கள்.! அப்படி யோசித்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க மருக்கள் போவதற்கு என்ன செய்வது என்று படித்து தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ ஒரே இரவில் முகப்பருக்கள் நீங்கி அழகான முகம் பெற குறிப்புகள் |
வெங்காயம் மருத்துவ பயன்கள்:
முதலில் 1 வெங்காயத்தை எடுத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்யுங்கள். பிறகு 1 மணி நேரம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். இது போல் ஒரு வாரம் போட்டு வந்தால் மருக்கள் உதிர்ந்து விடும்.
ஆமணக்கு எண்ணெய் பயன்கள்:
முதலில் ஒரு கிண்ணத்தில் ஆமணக்கு எண்ணெய் 1 தேக்கரண்டி, பேக்கிங் சோடா 1 தேக்கரண்டி சேர்ந்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை தினமும் தூங்குவதற்கு முன் மரு உள்ள இடத்தில் அப்ளை செய்து இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் முகத்தை கழுவி விடுங்கள்.
வெற்றிலை மருத்துவ பயன்கள்:
முதலில் 1 வெற்றிலையை எடுத்து கொள்ள வேண்டும். வெற்றிலையின் உள்ள காம்பை நசுக்க வேண்டும் அதிலிருந்து சாறு வெளிப்படும். அதனால் லேசாக நசுக்கி கொள்ள வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் சுண்ணாம்பு சேர்த்து தண்ணீர் குழைத்து கொள்ளவும். பின் முகத்தில் மரு உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். பிறகு நசுக்கிய வெற்றிலை காம்பை எடுத்து குழைத்து வைத்த சுண்ணாம்பு தண்ணீரில் தொட்டு மரு உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.
நீங்கள் இந்த பேஸ்ட்டை தடவி குறைந்தது 6 மணி நேரம் முகத்தில் இருக்க வேண்டும். இப்படி ஒரு 3 நாட்களுக்கு செய்து வந்தால்மரு இருந்த இடம் கூட தெரியாமல் மறைந்து விடும்.
அன்னாசிப்பழம் சாறு:
அன்னாசி பழத்தில் உள்ள சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். பின் இந்த சாற்றை முகத்தில் 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடுங்கள். இப்படி தொடர்ந்து ஒரு வாரம் அப்ளை செய்தால் மருக்கள் உதிர்ந்து விடும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் எதவாது ஒன்றை மட்டும் தொடர்ந்து பயணப்படுத்துங்கள். மருக்கள் இருந்த இடம் கூட தெரியாமல் மறைந்துவிடும்.
மருக்கள் வர காரணம்.?
சருமத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, வைரஸ் கிருமியின் தாக்கம், வயது முதிர்வு, அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீரில் உப்புச்சத்து அதிகமாக இருப்பது, சருமத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாதது, வியர்வையோடு இருப்பது, முறையான பராமரிப்பு இல்லாமை போன்ற காரணங்களால் மரு உருவாகும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |