Murungai Keerai Hair Pack in Tamil
நிறைய நபர்களுக்கு இந்த தலைமுடி பிரச்சனை உள்ளது. முடி எப்போதும் வறட்சியாக உள்ளது. இதற்கு தீர்வே கிடையாது என்று நினைப்பீர்கள். இதற்கு தீர்வு நிறையவே உள்ளது. மேலும், அதில் உள்ள சூப்பரான டிப்ஸை இந்த பதிவில் தெரிந்து கொள்ளவோம். அதற்கு முன் இந்த தலைமுடி கொட்டுவதற்கு நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். அதனை இனிமேல் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது என்ன என்பதை பார்த்து விட்டு, அந்த அருமையான ஹேர் பேக் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
டிப்ஸ்:
முதலில் தலை குளித்தால் தலையை ஷாம்பு சீயக்காய் இரண்டில் எது அப்ளை செய்தாலும் அதனை சிறிது தண்ணீரில் கலந்து அதன் பின் தலையில் தடவி குளியுங்கள்.
தலை குளித்த பின் தலையை துண்டை வைத்த அடித்து காயவைக்க வேண்டாம். ஈர தலையை பின்னுவது கூடாது. அப்படி செய்தால் தலை முடி கொட்டிக்கொண்டு தான் இருக்கும்.
மேலும் இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள். வாங்க இப்போது தலைமுடி ஹேர் பேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Murungai Keerai Hair Pack in Tamil:
முதலில் உங்கள் தலைமுடிக்கு ஏற்றது போல் முருங்கைக்கீரையை அலசி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து முதல் நாள் இரவே 6 டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஊறவைக்க வேண்டும். அதனை தண்ணீர் இல்லாமல் எடுத்து கொள்ளவும்.
இது தான் ஹேர் பேக்கில் முக்கியமான பொருள். தேங்காய் இதையும் முதல் நாள் இரவே அரைத்து வைத்து கொள்ளவும். எவ்வளவு என்று கேட்டால் உங்கள் தலைமுடிக்கு ஏற்றது போல் எடுத்து கொள்ளவும்.
இப்போது முருங்கை கீரை மற்றும் வெந்தயம் இரண்டையும் எடுத்து கொள்ளவும். மிக்சி ஜாரில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு அதை காட்டன் துணியை வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
வடிகட்டிய பேஸ்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து நாம் அரைத்து வைத்த தேங்காயில் உள்ள பால் மட்டும் மேல் வந்துவிடும் அதையும் கீரை பேஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி வால் போல் இருக்கிறதா..? அப்போ காடுபோல வளர்வதற்கு இந்த 2 பொருள் மட்டும் போதும்..!
பயன்படுத்தும் முறை:
நாம் எந்த ஹேர் பேக் பயன்படுத்தினாலும் தலையில் எண்ணெய் இருக்க வேண்டும். இல்லையென்றால் முக்கியமாக தலையின் வேரிலிருந்து தான் ஹேர் பேக் அப்ளை செய்யவேண்டும். அப்போது தான் தலையின் வேரில் புதிய முடி உருவாகும் மேலும் அடர்த்தியாகவும் வளரும்.
இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉👉 ஒரே நாளில் நரைமுடி கருமையாக இந்த இரண்டு பொருள் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |