நகம் வளர இதோ சில சூப்பர் டிப்ஸ்..! Nail Growth in 5 Days..!
Nail Growth in 5 Days: அழகை பராமரிக்க வேண்டும் என்றால் பலரது மனதில் முதல் தோன்றுவது முகத்தை பராமரிப்பது என்பது தான். ஆனால் இதையும் தாண்டி சிலர் கைகள், கால்கள் என உடலில் உள்ள அங்கங்களின் மீதும் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் இப்பொழுது பல பெண்கள் நகங்களை பராமரிக்க அதிக ஆர்வம் செலுத்துகின்றன. பலருக்கு கைவிரல் நகங்களை நீளமாக வளர்க்க அதிக ஆசை இருக்கும். எனவே இந்த பதிவில் கைவிரல் நகங்களை வலுவடையச் செய்து, ஆரோக்கியமாக வளரச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பதிவு செய்துள்ளோம்.
அவற்றையெல்லாம் படித்து தொடர்ந்து பாலோ செய்து வர தங்களது கைவிரல் நகங்களை வலுவாகவும், நீளமாகவும் வளர ஆரம்பிக்கும். சரி வாங்க 5 நாட்களில் நகம் வளர்ப்பது எப்படி (Nail Growth in 5 Days) என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
முகம் பிரகாசமாக 4 வகையான ஃபேஸ் பேக்..! |
முதலில் நகங்களை சுத்தம் செய்ய வேண்டும்:-
நகங்களை நாம் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எனவே ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி கொள்ளுங்கள், அதன் பிறகு 1 ஸ்பூன் தூள் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் BABY WASH ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது தங்கள் நகங்களை இந்த நீரில் 5 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து நகங்களை பிரஷை பயன்படுத்தி நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் நகங்களில் உள்ள அழுக்கு நீங்கும். இந்த முறையை தினமும் அல்லது வாரத்தில் மூன்று முறை செய்யலாம்.
Grow nails with garlic / டிப்ஸ்: 1
நகம் வளர டிப்ஸ் – பூண்டு நகங்களை வலிமைப்படுத்த மிகவும் பயன்படுகிறது. ஒரு பூண்டு துண்டை எடுத்து அதனை தோல் உரித்து கட் செய்து எடுத்து கொள்ளுங்கள். பின் கட் செய்த பூண்டினை கைவிரல் நகங்களின் மீது நன்றாக அப்ளை செய்ய வேண்டும். அதாவது நகங்களின் மேல் பகுதி மற்றும் உள்பகுதி, நகங்களின் ஓரங்களில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.
மசாஜ் செய்த பின் 20 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். பிறகு நகங்களை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நகம் உடைத்து விழுவது குறையும், நகம் நல்ல வலுவாக இருக்கும்.
Grow nails with olive oil / டிப்ஸ்: 2
ஆலிவ் ஆயில் நகங்கள் வளர மிகவும் பயன்படுகிறது எனவே நகங்களில் ஆலிவ் ஆயிலை நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் நகங்களில் இரத்தம் ஓட்டம் அதிகரிக்கப்படும் இதனால் நகம் ஆரோக்கியமாக வளரும், அதேபோல் Nail Cuticle-யில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்யும். மேலும் நகம் நல்ல வலுவாக இருக்கும்.
ஆலிவ் ஆயிலில் மசாஜ் செய்தபிறகு 20 முதல் 30 காத்திருக்கவும், பின் நகங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
Grow nails with lemon / டிப்ஸ்: 3
நகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க எலுமிச்சை ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது. எனவே எலுமிச்சையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கைவிரல் நகங்களில் 20 முதல் 30 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதினால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |