நரை முடி கருப்பாக மாற எண்ணெய்
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கக்கூடிய முடி பிரச்சனை என்றால் அது நரை முடி தான். முந்தைய காலத்தில் வயதானவர்களுக்கு தான் நரை முடி பிரச்சனை வரும். ஆனால் இப்போது எல்லாம் அப்படி கிடையாது. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் நரை முடி வருகிறது. அதனால் இனிமேல் எனக்கு நரை முடி பிரச்சனை இருக்கிறது என்ன செய்வது என்று புலம்பவும் வேண்டாம் மற்றவர்களிடம் அதற்கான தீர்வையும் கேட்க வேண்டாம். உங்களுடைய நரை முடி நிரந்தரமாக கருப்பாக மாற இன்றைய பதிவு ஒன்று போதும். சரி வாங்க அப்படி என்ன தான் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ 7 நாள் Challenge..! முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்க இதை ட்ரை பண்ணி பாருங்க..!
நரை முடி கருப்பாக மாற என்ன செய்ய வேண்டும்:
நரை முடி கருப்பாக மாற உங்களுடைய வீட்டிலேயே எண்ணெய் தயார் செய்யலாம். அந்த எண்ணெய் தயார் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- மருதாணி பவுடர்- 4 ஸ்பூன்
- கருவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- அவுரி இலை பொடி- 2 ஸ்பூன்
- கற்றாழை- சிறிய துண்டு
- கரிசலாங்கண்ணி இலை- 1 கைப்பிடி அளவு
- சின்ன வெங்காயம்- 1 கைப்பிடி அளவு
- தேங்காய் எண்ணெய்- 1/2 லிட்டர்
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிப்பது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் எடுத்துவைத்துள்ள கருவேப்பிலை மற்றும் கரிசலாங்கண்ணி இலை இரண்டையும் போட்டு நன்றாக பொடி போல அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு கற்றாழையை எடுத்துக்கொண்டு அதன் மேலே இருக்கும் முள்ளினை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள். அதேபோல சின்ன வெங்காயத்தையும் நறுக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி விடுங்கள். தேங்காய் எண்ணெய் சிறிது நேரம் சூடானதும் 2 ஸ்பூன் வெந்தயம் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்- 4
அடுப்பில் இருக்கும் வெந்தயம் எண்ணெய் கொதித்த பிறகு அதனுடன் நறுக்கி வைத்துள்ள கற்றாழையை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்- 5
5 நிமிடம் கழித்த பிறகு சின்ன வெங்காயம் மற்றும் 2 ஸ்பூன் அவுரி இலை பொடி இரண்டையும் போடு மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்- 6
கடைசியாக 5 நிமிடம் கழித்த பிறகு 3 ஸ்பூன் மருதாணி பவுடர் மற்றும் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை மற்றும் கரிசலாங்கண்ணி இலை பவுடரை இதனுடன் சேர்த்து நன்றாக எண்ணெய் நிறம் மாறும் வரை கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்- 7
எண்ணெய் கொதித்த பிறகு சிறிது நேரம் ஆற விட்டு அதனை மூடி வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் நீங்கள் தயார் செய்த அந்த எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்து விடுங்கள்.
நீங்கள் தயார் செய்த எண்ணெயை தலையில் அனைத்து இடங்களிலும் மசாஜ் செய்வது போல அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து தலை குளித்து விடுங்கள்.
வாரத்திற்கு 3 முறை இதுமாதிரி நீங்கள் செய்தால் நரை முடி கருப்பாக மாறி இருப்பதை பார்க்கலாம். மேலும் இந்த எண்ணெய் பொடுகு தொல்லையையும் போக்கி விடும்.
இதையும் படியுங்கள் ⇒ 15 நாள் CHALLENGE முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி முகம் வெள்ளையாக இதை ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |