இந்த விஷயத்தை மட்டும் தினமும் முகத்திற்கு செய்து வந்தால் முகம் நல்ல பொழிவை தரும்

Advertisement

தினமும் முகத்திற்கு அழகு சேர்க்க

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் முகத்திற்கு இயற்கையான முறையில் ஈஸியான அழகு குறிப்புகள். பொதுவாக அனைவருக்கும் தன்னை அழகாக வெளியில் காட்டிக்கொள்ள அதிகம் ஆசைப்படுவோம். அதேபோல் சிறிய வயதில் முகமானது சுருங்கி விடும். காரணம் முகத்திற்கு அழகை சேர்க்க வேண்டும் என்று நினைத்து நிறைய விதமான கிரீம்களை முகத்திற்கு தடவி வருவதால் முகம் விரைவில் சுருக்கி முதிர்ச்சியான தோற்றத்திற்கு மாறிவிடுவீர்கள். வாங்க இப்போது முகத்தை பாதுகாக்க சில வகையான டிப்ஸ் தெரிந்துகொள்வோம்..!

முகம் அழகாக டிப்ஸ்:

நம்முடைய முகமானது மிகவும் மிருதுவாக சருமத்தை கொண்டது. அதேபோல் முகத்திற்கு எதனை அப்ளை செய்தாலும் அது அப்படியே ஈர்க்கும் தன்மை கொண்டது. அவ்வாறு நாம் முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

முகம் அழகாக டிப்ஸ்

அடிக்கடி முகத்தில் கைகளை வைக்கக்கூடாது. அடிக்கடி முகத்தில் உங்களுடைய கைகளை வைத்தால் கையில் உள்ள அழுக்குகள், பாக்டீரியாக்கள் உள்ளது. ஆகையால் கைகளை வைத்தால் அதில் உள்ள கிருமிகளால் முகம் பாதிக்கப்படும். நாளடைவில் முகத்தில் பருக்கள், சிவப்பு தன்மை, கரும்புள்ளிகள் வரக்கூடும். அதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

இயற்கை அழகு குறிப்பு டிப்ஸ்

வெளியில் சென்று விட்டுவந்தால் கை கால்களை கழுவிவிட்டு வருவது பழக்கம்  அதேபோல் முகத்தை தண்ணீரால் கழுவிவிட்டு வருவது நல்லது.

அளவுக்கு அதிகமான மருந்து கிரீம்களை பயன்படுத்துபவர்கள் சிறிய வயதிலேயே முகத்திலுள்ள இயற்கை அழகை இழந்துவிடுவார்கள்.

உடலை மசாஜ் செய்வது போல் முகத்தையும் மசாஜ் செய்வது நல்லது காரணம் முகத்திற்கு இயக்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு மசாஜ் செய்வது நல்ல பலன்கள் கிடைக்கும். இப்படி செய்வதனால் இரத்த ஓட்டம் சீராகி முகம் பொலிவு போன்ற சருமம் கிடைக்கும்.

இயற்கையான முறையில் பொருட்களை கொண்டு முகத்திற்கு face பேக் போட்டுக்கொள்ளவும். அப்போது தான் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் உருவாகும். இதனால் முகம் பொலிவாக இருக்கும்.

இயற்கை அழகு குறிப்பு டிப்ஸ்

முகத்திற்கு அழகு சேர்க்க தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை. வீட்டில் பெண்கள் சமையலுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு முகத்திற்கு அழகு சேர்க்கலாம்.  வீட்டில் பெண்கள் காய்கள் மற்றும் பழங்கள் நறுக்கும் போது அதில் உள்ள சாறுகளை தனியாக எடுத்துக்கொண்டு சமையல் செய்யும் போது முகத்தில் தடவி கொண்டு வேலை செய்தால் முகம் பொலிவு பெறும். இதனால் தனியாக நேரம் செலவாகாது. அதேபோல் ஆரோக்கியமான முறையில் முகத்திற்கு அழகு சேர்க்கலாம்.

சமையலுக்கு தேவையான பொருட்களை அனைத்துமே வீட்டில் இருக்கும் அதில் முக்கியமான பொருள் என்றால் தக்காளி, உருளைக்கிழங்கு, பப்பாளி, கேரட், ஆப்பிள், பால், தயிர், எலுமிச்சை, வாழைப்பழம், பீட்ரூட் என பொருட்கள் இருக்கும். அனைத்தையும் நறுக்கும்போதே தடவி காய்ந்தவுடன் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் பொலிவு பெரும்.

வெள்ளரிக்காய் பீட்ருட் போன்ற பொருட்களை உதட்டில் தடவி வந்தால் உதட்டில் உள்ள கருமை நீங்கும்.

சுருக்கம் நீங்குவதற்கு ஆலிவ் ஆயிளுடன் தேன் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்த பின் முகத்தில் தடவி 15 நிமிடம் வரை உலர்ந்த பின் முகத்தை ஈரத்துணியால் துடைத்து வந்தால் முகம் பொலிவு பொலிவு பெரும்.

இதுபோன்ற உடல் ஆரோக்கியம் பற்றிய தகவலை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Heath Tips In Tamil

 

Advertisement