கொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள்..! Natural Beauty Tips In Tamil..!
கொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள் (Natural Beauty Tips In Tamil) : கொய்யாய் ஒரு மருத்துவம் குணம் வாய்ந்த பழமாகும். குறிப்பாக நோய் எதிர்ப்பு ஆற்றல், நல்ல ஜீரண சக்தி ஆகியவற்றை அளிக்க கூடிய வைட்டமின்களும் தாது உப்புகளும் கொய்யாய் பழத்தில் அதிகளவு நிறைந்துள்ளது என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் கொய்யாய் அழகை அதிகரிக்கவும், சருமத்தை பளபளப்பாகவும் மாற்றக்கூடிய திறன் கொண்டது.
அட ஆமாங்க கொய்யாய் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, பி மற்றும் சி நம் உடலில் கொல்லேஜன் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனால், சூரியனின் கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது.
சரி வாங்க இனி கொய்யாய் பழம் தோலை பயன்படுத்தி சருமத்தை (natural beauty tips in tamil) எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க.
கொய்யாய் பழத்தின் தோலை பயன்படுத்தி நம் வீட்டிலேயே பேஸ் பேக் தயார் செய்து, சருமத்தில் பூசி கொள்வதினால், சருமத்திற்கு புது பொலிவு கிடைக்கும். மேலும் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படும்.
முகம் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..! Face whitening tips tamil..! |
சரி இப்போது கொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள் (Natural Beauty Tips In Tamil) பற்றி காண்போம் வாங்க.
கொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள் / natural beauty tips in tamil..!
அழகு குறிப்புகள் – கொய்யாய் பேஸ் பேக்:
ஒளிரும் சருமம் கொய்யாவின் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும். சருமத்தை தளர்த்தி மென்மையாக்கும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படி ஃபேஸ்பேக் தயாரித்து வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும்.
தேவையானவை:
- தேன் – 1 தேக்கரண்டி
- கொய்யா பழத்தின் தோல்
செய்முறை
முதலில் கொய்யாப்பழத்தின் தோலை சீவிக்கொள்ள வேண்டும். சீவப்பட்ட தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பசையுடன் 1 தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும்.
20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகம் கழுவவேண்டும்.
சரும வறட்சியை போக்க அழகு குறிப்புகள் / natural beauty tips in tamil – கொய்யாய் பேஸ் பேக்:
கொய்யாவிலுள்ள நீர்ச்சத்து உங்கள் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு, தோலுக்கு மிருதுவான, ஆரோக்கியமான தோற்றத்தையும் அளிக்கிறது.
கீழே தரப்பட்டுள்ள முறைப்படி ஃபேஸ்பேக் செய்து, வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கி, புதுப்பொலிவு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
- ஓட்ஸ் – 1 மேசைக்கரண்டி
- முட்டை மஞ்சள் கரு – 1
- தேன் – 1 மேசைக்கரண்டி
- கொய்யா – ½ பழம்
செய்முறை:
முதலில் கொய்யாவை சீவிக்கொள்ள வேண்டும். 1 மேசைக்கரண்டி ஓட்ஸ் எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பொடி எடுத்து, அதனுடன் 1 மேசைக்கரண்டி தேன், சீவப்பட்ட கொய்யா மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும்.
20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தை மெதுவாக ஒத்தி உலர விடவும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (Natural Beauty Tips in Tamil)..! Alagu Kurippu 1000..! |
முகம் பளபளக்க அழகு குறிப்புகள் (Natural Beauty Tips In Tamil) – கொய்யாய் பேஸ் பேக்:
கொய்யாவிலுள்ள வைட்டமின்கள் உங்கள் சருமத்திற்கு புத்துணர்வு அளித்து பளபளப்பான தோற்றத்தை அளிக்கும். சோகையான தோற்றத்தை மாற்றி, பொலிவான தோற்றத்தை அளிக்கும்.
கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி பளபளப்பான சருமத்தை பெறுங்கள்.
தேவையானவை:
- நீர் – 1 கப்
- கொய்யா – 1
செய்முறை:
கொய்யாப்பழ தோல் அழகு குறிப்புகள் (Natural Beauty Tips In Tamil)..! கொய்யாப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நீர் கலந்து பசைபோன்று தயாரிக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.
தழும்புகள், பருக்களை போக்குவதற்கு, முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை மாற்றுவதற்கும், முகப்பருக்களை ஆற்றுவதற்கும் கொய்யாப்பழத்திலுள்ள இயற்கை ஆற்றல் உதவுகிறது.
உங்கள் முகத்திலுள்ள கரும்புள்ளிகளையும் பருக்களால் ஏற்பட்ட தழும்புகளையும் (natural beauty tips in tamil) போக்குவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை கையாளவும்.
தேவையான பொருட்கள் :
- எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
- கொய்யா – 1
- தேன் – 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் கொய்யாவை சீவி, பிழிந்து சாறு எடுக்கவும். அதனுடன் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
இந்த முறைகளை பின்பற்றி உங்கள் முகத்தை பொலிவாக்கிக் கொள்ளுங்கள்.
கடலை மாவு முகத்திற்கு தரும் அழகு ரகசியங்கள்..! |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |