இந்த 1 பொருள் போதும் நரைமுடியை நீக்கிவிடும்

Advertisement

Natural Hair Dye for Black Hair in Tamil

இப்பொது இருக்கும் ஜென்ரேஷன் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக நரைமுடி பிரச்சனை இருக்கிறது.. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அந்த காரணங்களை அறிய இப்போது நமக்கு நேரம் இல்லை. நரை முடி வந்துவிட்டது என்றவுடனே கடைகளில் விற்கப்படும் ஹேர் டையை தான் பெரும்பாலோனோர் பயன்படுத்துகின்றன. இருந்தாலும் சிலர் இயற்கையான முறையில் நரை முடியை கருமையாக மாற்ற வேண்டும் என்று விரும்புகின்றன. அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவு இருக்க போகிறது. இங்கு நாம் அருமையான ஹேர் டை செய்முறை விளக்கத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அந்த ஹேர் டை இப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. கருஞ்சீரகம் பொடி – இரண்டு ஸ்பூன்
  2. மருதாணி பவுடர் – ஒரு ஸ்பூன்
  3. அவுரி பொடி – ஒரு ஸ்பூன்
  4. தண்ணீர் – தேவையான அளவு

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே:
👉 https://bit.ly/3Bfc0Gl

செய்முறை விளக்கம் – Natural Hair Dye for Black Hair in Tamil:

முதலில் ஒரு இரும்பு வாணலியை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் இரண்டு ஸ்பூன் கருஞ்சீரகம் பொடி, ஒரு ஸ்பூன் மருதாணி பவுடர், ஒரு ஸ்பூன் அவுரி பொடி மற்றும் பேஸ்ட் பக்குவத்திற்கு கலவையை மிக்ஸ் செய்வதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

பிறகு அதற்கு மூடி போட்டு ஒரு நாள் முழுவதும் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

பின் மறுநாள் தலையில் அப்ளை செய்து 1/2 மணி நிறம் வரை காத்திருக்கவும். பின் எப்போதும் போல தலை குளிக்கவும்.

வாரத்தில் ஒரு முறை பின்பற்றலாம். நான்கு வாரத்தில் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்  👇
நரை முடி ஒரே வாரத்தில் கருமையாக தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவுங்க

மற்றொரு செய்முறை விளக்கம்:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும் பின் அதில் இரண்டு ஸ்பூன் டீத்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும். பின் அடுப்பை அணைத்துவிடலாம்.

கொதிக்க வைத்த டீத்தூளை வடிகட்டி ஓரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு கைப்பிடியளவு செம்பருத்தி இலையை மற்றும் தண்ணிக்கு பதில் அந்த டிகாஷனை ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை எடுத்துக்கொள்ளவும் அதில் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். வாணலியில் உள்ள நீர் வற்றி கலவை நன்கு கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும்.

கலவை நன்கு ஆறியதும் அதில் இருக்கும் டிகாஷன் அனைத்தையும் ஊற்றி கிளறவும், பின் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

மறுநாள் அதை தலைக்கு அப்ளை செய்யலாம். இந்த முறையும் வாரத்தில் ஒரு முறை ட்ரை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்
👉 காய், பழ தோலை தூக்கி எறியாதீர்கள்.. நரை முடிக்கு ஹேர் டை இயற்கையாக தயாரிக்கலாம்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement