2 பொருள் போதும் இயற்கை முறையில் நரைமுடி கருமையாக..! Natural hair dye in tamil
Natural hair dye in tamil – நண்பர்களுக்கு வணக்கம்.. டையே பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் வெறும் இரண்டு பொருட்களை கொண்டு நரைமுடியை மிக எளிமையான முறையில் கருமையாக்கலாம். இதற்காக நாம் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஹேர் டையை தலைக்கு பயன்படுத்த அதன் மூலம் ஏற்படும் பின் விளைவுகளை நாம் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. கெமிக்கல் நிறைந்த பொருட்களை நாம் தலைக்கு பயன்படுத்துவதினால் நமது கண்டிப்பாக ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் தான் வரும். அதுவே இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் நமக்கு எந்த ஒரு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளும் வராது. சரி வாங்க இன்றைய பதிவில் இயற்கையான முறையை வெறும் இரண்டு பொருட்களை மட்டும் பயன்படுத்தி நரை முடியை கருமையாக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- மருதாணி பவுடர் – ஒரு ஸ்பூன்
- அவுரி பொடி – மூன்று ஸ்பூன்
- வெது வெதுப்பான நீர் – தேவையான அளவு
ஹேர் டை செய்முறை – Natural hair dye in tamil:
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு ஸ்பூன் மருதாணி பரவுடர் மற்றும் மூன்று ஸ்பூன் அவுரி பொடி ஆகியவற்றை சேர்த்து அதனுடன் தேவையான அளவு வெது வெதுப்பான நீரை ஊற்றி நன்றாக பேஸ்டு போல் கலந்து கொள்ளுங்கள்.
பிறகு பத்து நிமிடம் கலவையை நன்றாக ஊறவைக்க வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கேரளா பெண்களின் அழகின் ரகசியம் இந்த பவுடர் தானா..!
பயன்படுத்து முறை:
10 நிமிடம் கலவை நன்கு ஊறிய பிறகு தலையை நன்றாக அப்ளை செய்ய வேண்டும். முக்கியமாக நரை முடி எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நன்றாக பேஸ்டை அப்ளை செய்யுங்கள்.
பிறகு 1½ மணி நேரம் தலையில் கலவையானது நன்கு ஊறட்டும். பிறகு தலைக்கு ஷாம்பு பயன்படுத்தாமல் தலையை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.
வாரத்தில் இரண்டு முறை இந்த கலவையை தலையில் அப்ளை செய்து வர தலையில் உள்ள நரை முடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்.
குறிப்பு:
இந்த பேஸ்டை ரொம்பவும் கெட்டியாக கலந்துவிட வேண்டாம், அதேபோல் ரொம்பவும் தண்ணியாகவும் கலந்துவிட வேண்டாம். இரண்டிற்கும் நடுத்தரமான அளவில் தண்ணீர் ஊற்றி கலவையை நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
இந்த பேஸ்டை தலையில் அப்ளை செய்யும் போது தலையில் எண்ணெய் தடவிட வேண்டாம். ஆக முதல் நாளே தலைக்கு ஷாம்பு போட்டு நன்றாக அலசிவிடுங்கள். பிறகு மறுநாள் இந்த பேஸ்டை தயார் செய்து தலைக்கு பயன்படுத்துங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் முகம் எப்பொழுதும் பால் போல வெள்ளையாக மாற வேண்டுமா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |