உங்க முகம் எப்போதும் பளப்பளப்பாக இருக்க இதை மட்டும் முகத்திற்கு போடுங்கள்..! செம பிரைட்டா இருப்பீங்க..!

Advertisement

Natural Homemade Cream For Glowing Skin in Tamil

ஒவ்வொருவருக்கும் முகத்தை அழகாக காட்டுவது சருமத்தில் உள்ள பளபளப்புதான். முகத்தில் பளப்பளப்பாக இருந்தால் தான் முகம் கலையாக தெரியும் என்று கூறுவார்கள். ஆனால் இப்போ இருக்கும் காலகட்டத்தில் அனைவருக்கும் முகம் பொலிவிழந்து தான் காணப்படுகிறது. காரணம் என்னவென்றால், ஒழுங்கற்ற உணவு பழக்க வழக்கங்கள், தூக்கமின்மை மாசுபாடு போன்றவை தான் காரணம். இதனை தடுக்க செயற்கையாக சில வலிகள் இருந்தாலும் இயற்கை பொருட்களை எந்த செயற்கை பொருட்களும் மிஞ்சவில்லை என்றே கூறலாம். அந்த வகையில் நம் பொதுநலம் பதிவில் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகத்தை எப்போதும்  பளப்பளப்பாக வைப்பது எப்படி..? என்பதை இப்பதிவில் கொடுத்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Make Your Skin Glow Naturally at Home in Tamil:

பாதாம்:

instant glow on face naturally at home in tamil

முதல் நாள் இரவே பாதாமை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து விடுங்கள். பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பால் சேர்த்து நன்டர்க பேஸ்ட் போல் அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு, தயாரித்த பாதாம் பேஸ்டினை எடுத்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதனை 10 அல்லது 15 நிமிடங்கள் அப்படியே முகத்தில் வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள்.

மேலும், நீங்கள் தினமும் பாதாம் எண்ணெயை பயன்படுத்தி முகத்தை 10 அல்லது 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள்.

இது ஒன்று போதும் 15 நிமிடத்தில் உங்க முகம் பளிச்சென்று மாறிவிடும்..!

தயிர்:

how to make your skin glow naturally at home in tamil

தயிரை மட்டுமே நம் முகத்திற்கு அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள்.

ஒரு கிண்ணத்தில் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு தயிரை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது இதனை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் முகத்தை நன்றாக கழுவி  விடுங்கள்.

ஆரஞ்சுத் தோல்:

 instant glow on face naturally at home in tamil

முதலில் ஆரஞ்சு தோலை சிறிது சிறிதாக உரித்து கொள்ளுங்கள். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டினை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவுங்கள்.

அதுமட்டுமில்லாமல், தினமும் காலையில் ஆரஞ்சு சாற்றில் சிறிதளவு உப்பு மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து ஜூஸ் ஆக அருந்தலாம்.

உங்க முகம் நாள் முழுவதும் பளப்பளப்பாக இருக்க அரிசிமாவுடன் இதை மட்டும் கலந்து போட்டால் போதும்..!

 

வாழைப்பழம்:

வாழைப்பழம்

முதலில் ஒரு மிக்ஸி ஜாரினை எடுத்து கொள்ளுங்கள். அதில் 1 வாழைப்பழம், 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.

மேலே சொல்லப்பட்டுள்ள 4 குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் முகத்திற்கு அப்ளை செய்தால் போதுமானது.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement