முகம் அழகாக மாற..! | Natural Powder for Face Wash…!
நீங்கள் முகத்தை எவ்வளவு தான் கிரீம் போட்டு அழகுபடுத்தினாலும் அந்த அழகு அதிக நாள் நீடிப்பதில்லை. உங்கள் முகத்தை நீங்கள் எப்பொழுதும் அழகாக வைத்திருக்க ஆசைப்பட்டால் சோப்பிற்கு பதிலாக இயற்கையான முறையில் செய்த பொடிகளை முகத்தில் போட்டு குளித்து பாருங்கள். உங்கள் முகம் அழகாக ஜொலிஜொலிக்கும். அந்த இயற்கை பொடி எப்படி செய்வது என்று தானே கேட்குறீர்கள்…? அதற்காகத்தான் இப்பதிவு. உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்கும் அந்த இயற்கை பவுடரை எப்படி செய்வது என்று இப்பதிவில் பார்ப்போம்.
அழகான முகத்திற்கு இயற்கை பேஸ் வாஷ் பவுடர்:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
பேஸ்வாஷ் பவுடர் செய்ய தேவையான பொருட்கள்:
- கஸ்தூரி மஞ்சள் தூள்- 100 கிராம்
- பாசிப்பயிறு- 100 கிராம்
- சந்தனத்தூள்- 150 கிராம்
- கோரைக்கிழங்கு பவுடர்- 100 கிராம்
- கிச்சிலி கிழங்கு பவுடர்- 100 கிராம்
- மகிழம் பூ பவுடர் –200 கிராம்
- பன்னீர் – தேவையான அளவு
உங்கள் முகத்தில் பருக்களினால் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்..!
இயற்கையான முறையில் பேஸ்வாஷ் பவுடர் செய்வது எப்படி..?
ஸ்டேப் :1
முதலில் கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயிறு, சந்தனத்தூள்,கோரைக்கிழங்கு பவுடர், கிச்சிலி கிழங்கு பவுடர், மகிழம் பூ பவுடர் போன்ற அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
ஸ்டேப் :2
பிறகு மிக்சியில் இருக்கும் பொருட்களுடன் சுத்தமான பன்னீர் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். பிறகு அதை எடுத்து சிறிய சிறிய உருண்டையாக பிடித்து வெயில் படாமல் நிழலில் காயவைக்க வேண்டும்.
ஸ்டேப் :3
இப்போது அந்த உருண்டைகள் நன்றாக உலர்ந்த நிலைக்கு வந்ததும் ஒரு டப்பாவில் போட்டு காற்று படாத வகையில் மூடிவைக்க வேண்டும்.
ஸ்டேப் :4
எனவே நீங்கள் தயார் செய்து வைத்த சிறிய இயற்கைபொடி உருண்டையை எடுத்து அதனுடன் சுத்தமான பசும்பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும்.
ஸ்டேப் :5
இதை நீங்கள் தினமும் குளிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே தடவ வேண்டும். பிறகு குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு உங்கள் முகத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு நீங்கள் தினமும் செய்து வந்தால் இயற்கையாகவே உங்கள் முகம் அழகாக ஜொலிஜொலிக்கும். இந்த பொடியை உங்கள் முகத்திற்கு பயன்படுத்தும் போது நீங்கள் முகத்திற்கு சோப்பு போடக் கூடாது.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |