முடி உடைவதை தடுக்க
பெண்களை பொறுத்தவரை முடி வளரவே கஷ்டமாக இருக்கு என்று கூறும் வகையில் இருக்கும் பட்சத்தில் மேலும் சில பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்பது பெரிய புலம்பலாக இருக்கிறது. அது என்னவென்றால் சிலருக்கு தலையில் சீப்பு தலை சீவும் போது எல்லாம் முடி பாதிலேயே உடைந்து அப்படியே கையோடு வந்துவிடுகிறது என்ற பிரச்சனை இருக்கும். இது மாதிரி முடி உடைவதற்கான காரணம் என்னவென்றால் முடி வறட்சியாயக இருத்தல், உடல் சூடு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை ஆகும். இத்தகைய முடி உடைவதை தவிர்த்து முடியினை வேகமாக வளரச் செய்வதற்கான ஒரு அருமையான ஹேர் பேக்கினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாங்க அது என்ன ஹேர் பேக் என்று தெரிந்துக்கொள்ளலாம்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Home Remedies For Hair Breakage and Growth:
செம்பருத்தி இலையானது முடி உதிர்வை தடுத்து முடியினை வேகமாக வளர செய்வதற்கு சிறந்த ஒன்றாக விளங்குகிறது. அதனால் செம்பருத்தி இலையுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து எப்படி ஹேர் பேக் தயாரிப்பது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
- செம்பருத்தி இலை- 1 கைப்பிடி அளவு
- கற்றாழை- சிறிய துண்டு
- கான்பிளவர் மாவு- 2 ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்
இதையும் படியுங்கள்⇒ நாள் முழுவதும் முகம் பளபளப்பாக இருக்க கற்றாழையுடன் இந்த ஒரு பொருளை மிக்ஸ் செய்தால் போதும்..
முடி உதிர்வதை தடுக்க முடி வளர:
செம்பருத்தி இலையினை சுத்தம் செய்தல்:
முதலில் 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலையினை சுத்தமாக அலசி கொள்ளுங்கள்.
கற்றாழை ஜெல் தயார் செய்தல்:
அதே போல எடுத்து வைத்துள்ள கற்றாழையினையும் தண்ணீரில் அலசி கொண்டு அதன் உள்ளே இருக்கும் கற்றாழை ஜெல்லினை எடுத்து வைத்து விடுங்கள்.
மிக்சி ஜாரில் பொருட்களை சேர்த்தல்:
இப்போது மிக்சி ஜாரில் அலசி வைத்துள்ள செம்பருத்தி இலை, கற்றாழை ஜெல் மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகிய அனைத்தினையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுவும்.
சாற்றினை வடிகட்டுதல்:
அடுத்து அரைத்து வைத்துள்ள ஹேர் பேக்கினை ஒரு காட்டன் துணியில் வைத்து நன்றாக சாறு பிழிந்து கொண்டு ஒரு பவுலில் வைத்து கொள்ள வேண்டும்.
பவுலில் கான்பிளவர் மாவு சேர்த்தல்:
அதன் பிறகு ஒரு பவுலில் 2 ஸ்பூன் கான்பிளவர் மாவு எடுத்துக்கொண்டு அதற்கு போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.
கடாயில் பேக்கினை சேர்த்தல்:
கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் செம்பருத்தி இலை சாறு மற்றும் கான் பிளவர் மாவு கலந்து வைத்துள்ள தண்ணீர் இந்த இரண்டினையும் சேர்த்து நன்றாக சூடுபடுத்தி கொண்டு பின்பு அடுப்பை அணைத்து விட்டு ஹேர் பேக்கினை ஆற வைக்க வேண்டும்.
அவ்வளவு தான் ஹேர் பேக் தயார் ஆகிவிட்டது.
உங்கள் சருமத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய இதை மட்டும் செய்யும் போதும்.
அப்ளை செய்யும் முறை:
ஹேர் பேக் அப்ளை செய்வதற்கு முன்பாக தலையில் முதலில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை முடியின் அனைத்து பகுதிகளிலும் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து வழக்கம் போல ஷாம்பு போட்டு தலை குளித்து விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் முடி உடைவது குறைந்த முடி நீளமாகவும், ஸ்ட்ரைட்டாகவும் இருக்கும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |