Naturally Black Hair Dye For Grey Hair in Tamil
நரைமுடி இல்லாதவர்கள் என்று இன்றைய காலத்தை பொறுத்தவரை யாரும் இல்லை. ஏனென்றால் இன்றைய காலத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் நரை முடி பிரச்சனை உள்ளது. அத்தகைய நரை முடி பிரச்சனைக்கு பெரும்பாலான மக்கள் தீர்வாக நினைப்பது ஹேர் டையினை மட்டும் தான். ஆகையால் கடையில் விற்கும் செயற்கை ஹேர் டையினை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றை பயன்படுத்துவதனால் முழுமையான பலனும் கிடைப்பது இல்லை மற்றும் அவை நம்முடைய தலைக்கு நன்மையும் கிடையாது. அதனால் தான் நீங்கள் நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான ஒரு அருமையான ஹேர் டை இயற்கை முறையில் வீட்டிலேயே தயாரித்து எப்படி அப்ளை செய்வது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
நரை முடி கருப்பாக மாற:
இப்போது வெறும் மூன்று பொருட்களை மட்டும் வைத்து எப்படி ஹேர் டை தயார் செய்து நர முடியினை கருப்பாக எளிமையான முறையில் மாற்றுவது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
- பீட்ரூட்- 1
- கருவேப்பிலை பவுடர்- 1 கைப்பிடி அளவு
- கரிசலாங்கண்ணி பவுடர்- 1 தேக்கரண்டி
இதையும் படியுங்கள்⇒ என்றும் இளமையாக இருப்பதற்கும், முகம் பளபளப்புக்கும் இந்த ஒன்று போதும் ட்ரை பண்ணி பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க…
நரை முடி கருப்பாக இயற்கை டை:
கருவேப்பிலை பவுடர் தயார் செய்தல்:
கருவேப்பிலையில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. ஆகையால் இதனை நாம் முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய முடி கருப்பாகவும் மற்றும் அடர்த்தியாகவும் இருப்பதோடு மட்டும் இல்லாமல் நரைமுடி பிரச்சனையும் சரி ஆகிவிடும்.அதனால் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை எடுத்துக்கொண்டு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லாமல் பவுடர் போல நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
பீட்ரூட் ஜூஸ் தயார் செய்தல்:
அடுத்து 1 பீட்ரூட்டை எடுத்துக்கொண்டு அதன் மேல் இருக்கும் தோலினை சீவிக்கொள்ள வேண்டும். பின்பு அதனை சிறு சிறு துண்டாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்த்து ஜூஸ் போல அரைத்து கொள்ளுங்கள்.
இப்போது அந்த ஜூஸை வடிகட்டி கொள்ளவும்.
கிண்ணத்தில் பொருட்களை சேர்த்தல்:
அதன் பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பவுடர், 1 தேக்கரண்டி அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை பவுடர் மற்றும் பீட்ரூட் ஜூஸ் சிறிதளவு சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொண்டு அப்படியே மூடி வைத்து விட வேண்டும்.
அவ்வளவு தான் இப்போது ஹேர் டை தயார் ஆகிவிட்டது.
இதையும் படியுங்கள்⇒ ஆரஞ்சு தோலுடன் இதை மட்டும் கலந்து போடுங்கள்..! முகம் எப்போதும் பளிச்சென்று ஜொலிக்கும்..
தலைமுடியில் அப்ளை செய்யும் முறை:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஹேர் டையினை மறுநாள் காலையில் எழுந்து தலையில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் வைத்து கொள்ளவும்.
20 நிமிடம் கழித்து வழக்கம் போல தலை குளிக்க வேண்டும். இதனை வாரம் 2 முறை ட்ரை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் போதும் தலையில் நரைமுடி இருக்கவே இருக்காது.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |