முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர நெல்லிக்காயை இப்படி பயன்படுத்துங்கள்

natural hair pack for hair growth in tamil

முடி கருப்பாக அடர்த்தியாக வளர

பல  பெண்களுக்கு இருக்கும் பிரச்சனை முடி கருப்பாக இல்லை, அடர்த்தியாக இல்லை என்று நினைத்து கவலை படுவார்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சில நபர்களுக்கு முடி நீளமாக இருக்கும். அடர்த்தியாக இருக்காது. இன்னும் சில பெண்களுக்கு நீளம் அடர்த்தி இரண்டுமே இருக்கும் ஆனால் முடி சிவந்த நிறத்தில் இருக்கும். முடியும் கருப்பாக இருக்கனும். அடர்த்தியாகவும் வளரனும் என்ன செய்வது. இது இரண்டையுமே ஒரே ரெமடியில் கொண்டு வர முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். அது என்ன ரெமடி என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ 15 நாளில் கொட்டிய முடி வளர இத மட்டும் செய்ங்க

முடி கருப்பாக வளர செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • கருஞ்சீரகம் – 1தேக்கரண்டி
  • வெந்தயம் – 1தேக்கரண்டி
  • பெரிய நெல்லிக்காய் -3
  • விளக்கெண்ணெய் – 1தேக்கரண்டி

நெல்லிக்காய் ஹேர் பேக் செய்வது எப்படி.?

ஸ்டேப்:1 

முதலில் கருஞ்சீரகத்தையும், வெந்தயத்தையும் எடுத்து இரவு முழுவதும் ஊற வையுங்கள். மறுநாள் கருஞ்சீரகத்தையும், வெந்தயத்தையும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டிய பின் அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:2

அடுத்து 3 பெரிய நெல்லிக்காய் எடுத்து கொள்ளவும். நெல்லிக்காயில் உள்ள விதைகளை நீக்கி விட்டு நன்றாக சுத்தம் செய்து வையுங்கள். பின் சுத்தம் செய்த நெல்லிக்காயை  அரைத்து கொள்ளுங்கள். நன்றாக பேஸ்ட்டாக அரைத்து கொள்ளுங்கள். அரைத்து வைத்திருக்கின்ற இரண்டையும் மிக்ஸ் செய்யுங்கள்.

ஸ்டேப்:3

ஒரு காட்டன் துணியில் அரைத்து வைத்திருக்கின்ற கலவையை சேர்த்து சக்கை இல்லாமல் வடிகட்ட வேண்டும். வடிகட்டியதில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஹேர் பேக் ரெடி..

பயன்படுத்தும் முறை:

இந்த ஹேர் பேக்கை 1/2 மணி நேரம் தலையில் தேய்த்து வைத்து கொள்ளுங்கள். 1/2 மணி நேரம் கழித்த பிறகு தலை குளித்து விடுங்கள்.

இது போல் வாரத்தில் இரண்டு முறை அப்ளை செய்தால் விரைவில் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பித்துவிடும்.

வெந்தயம் சேர்த்திருப்பதால் சளி பிடித்துவிடும் என்ற பயம் வேண்டாம். சீரகம் சேர்த்திருப்பதால் சளி பிடிக்காது. பயம் இல்லாமல் இந்த ஹேர் பேக்கை அப்ளை செய்யலாம்.

Nellikai Benefits for Hair in Tamil:

நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. அதனால் இது முடிக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும். இந்த நெல்லிக்காய் பேஸ்ட்டை முடிக்கு தடவும் போது வேர் நுனி முதல் சென்று முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.

வயதான பிறகு வரும் இளநரையை வரமால் தடுக்க நெல்லிக்காய் உதவுகிறது.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami