How to Remove Oil From Face Permanently Naturally in Tamil
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முகத்தில் எண்ணெய் வழிவது பெரிய பிரச்சனையாக இருக்கும். இதற்காக பியூட்டி பார்லர் சென்று அழகுபடுத்துவார்கள். இல்லையென்றால் வெளியில் செல்லும் போது என்ன தான் மேக்கப் போட்டாலும் கொஞ்ச நேரத்திலே அந்த மேக்கப் கலைந்து முகத்தில் எண்ணெய் வழிய ஆரம்பித்துவிடும். அதனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நிரந்தரமாக எண்ணெய் வழிவதை எப்படி எப்படி நிறுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முகத்தை கழுவ வேண்டும்:
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 2 முறை முகத்தை கழுவ வேண்டும். நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் சோப்பை கொண்டு முகத்தை கழுவலாம், இல்லையென்றால் சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவினாலே போதுமானது.
தேன்:
தேன் பாக்ட்ரியாவை எதிர்த்து போராடும் பண்பை கொண்டுள்ளது. அதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் முகப்பருவிற்கு சிறந்த பலனை அளிக்கிறது. தேன் முகத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. அதாவது முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை நீக்கி ஈரப்பதமாக வைத்து கொள்ள உதவுகிறது.தேனை முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
முகத்தில் உள்ள குழிகளை மறைக்க ஐஸ் கட்டி, கற்றாழை முதல் இன்னும் சில குறிப்புகள்
ஓட்ஸ்:
ஓட்ஸ் முகத்தில் உள்ள எண்ணெயை நீக்க உதவுகிறது. 1/2 கேயோ ஓட்ஸை எடுத்து அரைத்து வெந்நீரில் பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். அதனுடன் தேன் 1 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
முட்டை மற்றும் எலுமிச்சை:
எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரஸ் அமிலம் முகத்தில் உள்ள எண்ணெயை உறிஞ்சுகிறது. எலும்பிச்சையில் பாக்ட்ரியாவை எதிர்த்து போராடும் திறன் கொண்டது.
ஒரு பவுலில் முட்டையின் வெள்ளை கரு, எலும்பிச்சை சாறு 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடவும்.
பாதாம்:
5 பாதாமை எடுத்து அரைக்கவும். அதில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளவும்.
கற்றாழை:
கற்றாழையில் உள்ள தோலை நீக்கி விட்டு அதில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த ஜெல்லை மட்டும் எடுத்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து செய்து வந்தாலே முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி விடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |