7 நாட்களில் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

முகத்தில் எண்ணெய் வடிதல்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சரும அமைப்பு காணப்படும். அதில் ஒன்று தான் ஆயில் ஸ்கின். இந்த சருமத்தை பராமரிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஏனென்றால், பருக்கள் அதிகமாக காணப்படும். இருந்தாலும் ஆயில் ஸ்கின் இருப்பது ஒரு விதத்தில் நல்லது. எப்படியென்று நினைக்கிறீர்களா.! ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு முக சுருக்கம் சீக்கிரமாக காணப்படாது.

அவர்கள் இளமையாக காணப்படுவார்கள். லேசாக எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தால் பிரச்சனை இல்லை. அதிகப்படியான முகத்தில் எண்ணெய் வழியும் போது முகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பதிவில் இயற்கையான முறையில் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சனையை சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க தேவையான பொருட்கள்:

  1. ஆளி விதை – 1 தேக்கரண்டி
  2. கற்றாழை ஜெல் – 2 தேக்கரண்டி
  3. எலும்பிச்சை சாறு -1/2 தேக்கரண்டி
  4. பாதாம் – 2
  5. பிஸ்தா – 2
  6. தாமரை விதை – 1 கப்
  7. வைட்டமின் e capsule 2
  8. ரோஸ் வாட்டர் – 1 தேக்கரண்டி

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

செய்முறை:

oily skin face mask homemade in tamil.jpg

முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் ஆளி விதை சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இந்த தண்ணீர் கையில் தொட்டு பார்த்தால் பிசுபிசுப்பு தன்மை காணப்படும்.

அப்போது அடுப்பை அணைத்து விட்டு ஆளி விதை தண்ணீரை ஆறவிட வேண்டும். ஆறியதும் ஒரு துணியில் வைத்து வடிக்கட்டி அடிப்பகுதியில் வந்த ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும்.

அடுத்து மிக்ஸ் ஜாரில் பாதாம், பிஸ்தா, ரோஸ் வாட்டர் சேர்த்து அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும்.

பின் அதனுடன் கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி, ஆளி விதை ஜெல் 2 தேக்கரண்டி, எலும்பிச்சை சாறு 1/2 தேக்கரண்டி, வைட்டமின் e capsule 2 சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அப்ளை செய்யும் முறை:

இந்த பேக்கை தூங்குவதற்கு முன் அப்ளை செய்து காலையில் முகத்தை கழுவி கொள்ளவும். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு அப்ளை செய்து வாருங்கள் மாற்றத்தை காண்பீர்கள்.

முட்டையின் வெள்ளை கரு:

முகத்தில் எண்ணெய் வடிதல்

முட்டையின் வெள்ளை கருவை மட்டும் முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடுங்கள். தினமும் இந்த குறிப்பை பயன்படுத்தினால் விரைவில் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி விடும்.

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று கவலைப்படாதீர்கள்.! இந்த டிப்ஸை மட்டும் Follow பண்ணா முகம் பிரகாசிக்கும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement