Oily Skin Homemade Face Mask in Tamil
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சில பேருடைய முகமானது குளித்திட்டு வந்த பிறகு பார்த்தாலே பொலிவிழந்த மாதிரி இருக்கும். எப்போதும் முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். இதற்காக கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும் போது முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையை கையாளுவது நல்லது.
கற்றாழை மற்றும் எலுமிச்சை:
ஒரு பவுலில் கற்றாழை ஜெல்லை 2 தேக்கரண்டி எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த பேக் ஆனது முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
கற்றாழை ஆனது குளிர்ச்சியானது. அதனால் உங்களுக்கு நுரையீரல் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை ஏதும் இருந்தால் இந்த பேக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஓட்ஸ் மற்றும் தேன்:
ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் தூளை எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் தேன் சிறிதளவு சேர்த்து கொள்ள வேண்டும். இவை இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவி நன்றாக ஒரு 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேக்கை வாரத்தில் 1 முறை என்று தொடர்ந்து 3 வாரத்திற்கு பயன்படுத்தி வந்தால் நல்ல ரிசல்ட் கிசைக்கும்.
கடலை மாவு மற்றும் மஞ்சள் பேக்:
ஒரு பவுலில் 2 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் 1தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கினை முகத்தில் தடவி 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வருவதன் மூலம் நல்ல ரிசல்ட்டை பெற முடியும்.
தக்காளி மற்றும் கடலை மாவு பேஸ் பேக்:
ஒரு கிண்ணத்தில் தக்காளியை அரைத்து சாறாக எடுத்து கொள்ள வேண்டும். இதில் 1 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கினை முகத்தில் தடவி 15 நிமிடம் முகத்தில் வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு ஒருமுறை என்று 5 வாரம் பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை ஆனது நீங்கும்.
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














