உங்க முடியை பார்த்து கண் வைக்கணுமா அப்போ எண்ணெயை தடவுங்க 100% ரிசல்ட்

Advertisement

Onion and Fenugreek Oil for Hair Benefits Tamil

ஆண்களை விட  பெண்கள் தான்  முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இதற்காக நிறைய விதமாக கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவார்கள். இதனால் அவ்வப்போது ரிசல்ட்டை கொடுத்தாலும் பக்க விளைவுகள் ஏற்படும். அதனால் இயற்கையான முறையை கையாள்வது அவசியமானது. உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் இயற்கையான முறையில் வெங்காய வெந்தய எண்ணெயை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.இதனை எப்படி தயாரிக்க வேண்டும், எப்படி பயன்படுத்துவது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

வெந்தயம் மற்றும் வெங்காயம் பயன்கள்:

 வெந்தயத்தில் புரதமும், நிக்கோடினிக் அமிலமும் உள்ளது. இந்த சத்து ஆனது முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இதில் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், வைட்டமின் ஏ,சி, மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை இருக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் ஆனது முடி உதிராமல் இருக்க உதவுகிறது. நரை முடி வளர்வதை தடுத்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் பொடுகு பிரச்சனை வராமல் தடுக்கிறது. இத்தனை நன்மை வாய்ந்த வெந்தயம் மற்றும் வெங்காயத்தின் நன்மைகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.. 

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • வெங்காயம் – 1
  • வெந்தயம்- 2 தேக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய்- 1/2 கப்

முடி உதிர்வை நிறுத்தி முடியை அடர்த்தியாக வளர வைக்க இதை மட்டும் பயன்படுத்துங்கள்

எண்ணெய் செய்முறை:

Onion and Fenugreek Oil for Hair

முதலில் 1 வெங்காயத்தை எடுத்து சிறியதாக நறுக்கி, மிக்சி ஜாரில் சேர்த்து இதனை ஜூஸாக அடுத்து கொள்ள வேண்டும். இந்த ஜூஸை நீங்கள் வடிக்கட்டியை பயன்படுத்தி வடிக்கட்டி கொள்ள வேண்டும். சக்கை இல்லாமல் வெறும் ஜூஸை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.

வெந்தயத்தை முதல் நாள் இரவே எடுத்து ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்பு இதனை மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கடாய் வைத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி லேசாக சூடு செய்து கொள்ள வேண்டும். இதில் அரைத்த வெந்தய பேஸ்ட்டை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை சேர்த்து 5 அல்லது 10 நிமிடங்கள் வரைக்கும் சூடு இருக்க வேண்டும். அதன் பிறகு இதனை வெங்காய ஜூஸை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை ஆப் செய்து விட வேண்டும். முக்கியமாக இந்த எண்ணெய் செய்கின்ற வரைக்கும் அடுப்பை சிம்மிலே வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த எண்ணெய் ஆறிய பிறகு ஒரு கண்ணடி பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

Onion and Fenugreek Oil in tamil

இந்த எண்ணெயை தலையி முடி உச்சியில் ஆரம்பித்து நுனி வரைக்கும் நன்றாக அப்ளை செய்து கொள்ள வேண்டும். இதனை ஒரு 2 நிமிடத்திற்கு மசாஜ் செய்து கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் வெந்தயம் ஆனது குளிர்ச்சியானது. அதனால் எனக்கு குளுமை ஒத்துக்காது என்கிறவர்கள் இதனை ரொம்ப நேரம் தலையில் வைத்திருக்க வேண்டாம். எனக்கு ஒன்னும் செய்யாது, குளுமை ஒத்துக்கும் என்கிறவர்கள் இரவு முழுவதும் வைத்திருக்கலாம். இந்த எண்ணெயானது தலையணையில் ஓட்டாமல் இருப்பதற்கு தலையில் ஷவர்கேப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை நீங்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தினாலே முடி ஆனது அடர்த்தியாக வளரும்.

உங்கள் ட்ரையான முடியை சாப்டாக்க இந்த ஹேர் கண்டிஷனரை பயன்படுத்துங்கள்.!

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!

 

Advertisement