தலைமுடி அடர்த்தியாக வளர வெங்காய எண்ணெய் தயாரிக்கும் முறை..!

Onion Hair Oil Preparation in Tamil

வெங்காய எண்ணெய் தயாரிக்கும் முறை..! Onion Hair Oil Preparation in Tamil..!

அனைவருக்கும் வணக்கம்..! இப்பொழுது பலருக்கும் இருக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்வு பிரச்சனை தான். இதற்கு காரணம் முறையற்ற உணவு முறை என்று தான் சொல்ல வேண்டும். இந்த முடி உத்திரவு பிரச்சனையை சரி செய்ய பலரும் விதவிதமான கெமிக்கல் நிறைந்த எண்ணெய்களை விலை அதிகம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் மேலும் முடி உத்திரவு பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் இந்த முடி உதிர்வு பிரச்சனை சரி செய்ய இயற்கை வைத்தியம் நிறைய உள்ளது அவகற்றில் ஒன்று தான் வெங்காயம். நம் வீட்டு கிச்சன்லேயே இருக்கக்கூடிய ஒரு இயற்கையான அற்புதப் பொருள் வெங்காயம். வெங்காயத்தை சமையல் செய்ய பயன்படுத்துகின்றோம். ஆனால் வெங்காயம் சமையலுக்கு மட்டுமல்லாது முடி வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுகிறது. பொடுகு தொல்லை, முடி உதிர்தல், முடி வளர்ச்சியின்மை, வழுக்கை போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் வெங்காயம் ஒரு சிறந்த தீர்வளிக்கும். சரி இந்த வெங்காயத்தை பயன்படுத்தி கூந்த எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

வெங்காய எண்ணெய் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • தேங்காய் எண்ணெய் – 1/4 லிட்டர்
  • வெந்தயம் – ஒரு ஸ்பூன்

வெங்காய எண்ணெய் செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு ஒன்று இரண்டாக நறுக்கி கொள்ளுங்கள்.

பின் அதனை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டு போல் அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் ஒரு கனமான கடாய் வைத்து அவற்றில் 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அரைத்து வைத்துள்ள வெந்தயம் பேஸ்ட்டை சேர்த்து கிளறிவிடுங்கள்.

பிறகு 5 நிமிடம் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எண்ணெயை காய்ச்ச வேண்டும். 6 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை ஆப் செய்து எண்ணெயை ஆறவைக்கவும். எண்ணெய் நன்கு ஆறியதும் ஒரு சுத்தமான பாட்டிலில் எண்ணெயை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். பின் அவற்றில் ஒரு ஸ்பூன் வெந்தியத்தை சேர்க்க வேண்டும். பின் இந்த எண்ணெயை மூடி ஒருவாரம் அப்படியே வைத்திருங்கள்.

ஒருவாரம் கழித்த பின் அந்த எண்ணெயை தலை முடியில் அப்ளை செய்யலாம். இதனை நீங்கள் கூந்தல் எண்ணெய்யாகவும் உபயோகப்படுத்தலாம். அல்லது எண்ணெய்யை தலையில் அப்ளை செய்த பின் 30 மணி நேரம் கழித்து தலையை அலசிவிடலாம்.

பயன்கள்:

இந்த வெங்காய எண்ணெயை பயன்படுத்துவானினால் தலை முடி நன்கு அடர்த்தியாக வளரும். பொடுகு பிரச்சனை சரி ஆகும், முன் நெற்றியில் வழுக்கை இருந்தாலும் அந்த இடத்தில் மீண்டும் புதிய முடிகளை வளர செய்யும். குறிப்பாக இந்த வெங்காய எண்ணெய் முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த எண்ணெயாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். எந்த இரு பக்க விளைவுகளும் ஏற்படாது. இருப்பினும் ஆஸ்துமா, சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

முடி வளர ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி?

இயற்கை அழகு குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami