உதிர்ந்த முடி வளர வெங்காயம் சாறு உதவுகிறது..!Chinna Vengayam for Hair in Tamil

Advertisement

தலை முடி நன்கு வளர்ச்சியடைய வெங்காய சாறு மிகவும் உதவுகிறது..! onion juice for hair growth in tamil..!

முடி வளர வெங்காயம் / onion juice for hair growth in tamil: தலை முடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உதவுகிறது.

இதற்கு என்ன காரணம் என்றால் வெங்காயத்தில் இருக்கும் சல்பர் தான் முக்கிய காரணம் ஆகும்.

குறிப்பாக வெங்காயத்தை கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தினால் கூந்தல் பிரச்சனை, பொடுகு பிரச்சனை, முடி உதிர்வு மற்றும் முடி வெடிப்பு ஆகிய பிரச்சனைகள் சரியாகும்  (hair growth) கூந்தலும் நன்கு வளரும்.

ஆய்வு ஒன்றில் வெங்காயத்தில் இருக்கும் சல்பர் கூந்தல் உதிர்வால் ஏற்படும் வழுக்கை தலையில் முடி வளர உதவுகிறது என்று தெரிய வந்துள்ளது.

எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்து, முடி குறைந்தது போல் காணப்பட்டால், வெங்காயத்தை தலைமுடி குறைவாக இருக்கும் இடத்தில் பயன்படுத்தி வாருங்கள்.

வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், ஸ்கால்ப்பில் எந்த ஒரு தொற்றும் வராமல் இருக்கும்.

மேலும் வெங்காயத்தைக் கொண்டு பலவாறு ஹேர் மாஸ்க்குகள் போடலாம். இவ்வாறு வெங்காயத்தை பல பொருட்களுடன் சேர்த்து கூந்தலுக்கு மாஸ்க் போடுவதால், கூந்தல் உதிர்தல் குறைவதோடு, கூந்தலும் நன்கு பட்டுப் போன்று மென்மையாக பொலிவோடு காணப்படும்.

முடி அடர்த்தியாக வளர வெங்காயம்:

chinna vengayam for hair in tamil: வெங்காயத்தை அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி, ஒரு ஈரமான துணியை தலையில் சுற்றி, 25-30 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

முடி நன்கு வலிமையாக இருப்பதுடன், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளையும் போக்கலாம்.

வெங்காயம் சாறு:

vengayam benefits for hair in tamil: வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து, கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து, சுடுநீரில் நனைத்து பிழிந்த துணியை தலையில் சுற்றி 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கூந்தலின் வளர்ச்சியும் (onion juice for hair growth in tamil) அதிகரிக்கும்.

கூந்தல் நன்கு வளர வெங்காயம்:

onion juice for hair growth in tamil:- கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும் மாஸ்க்குகளில் இது மிகவும் சிறந்தது.

அதற்கு வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து குளித்தால், சொட்டையாக உள்ள இடத்திலும் கூந்தல் நன்கு வளரும்

பொடுகு தொல்லை நீங்க:

onion juice for hair growth in tamil:- பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், எலுமிச்சை சாற்றினை வெங்காய சாற்றில் சேர்த்து கலந்து மசாஜ் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் இந்த முறையால் ஸ்கால்ப் சுத்தமாவதோடு, கூந்தலின் வளர்ச்சியும் (hair growth) அதிகரிக்கும்.

வெங்காய விழுது:

onion juice for hair growth in tamil:- வெங்காய விழுதில், சிறிது தயிர் சேர்த்து நன்கு அடித்து, அந்த கலவையை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற, மசாஜ் செய்து, 45 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்கலாம்

வெள்ளைக்கருவுடனும் வெங்காய சாறை பயன்படுத்தலாம்:

onion juice for hair growth in tamil:- கூந்தலுக்கு முட்டை மிகவும் நல்லது. அத்தகைய முட்டையின் வெள்ளைக்கருவை வெங்காயச் சாற்றுடன் சேர்த்து நன்கு அடித்து, ஈரமான கூந்தலில் தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதோடு, கூந்தலும் நன்கு பட்டுப் போன்று இருக்கும்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> அழகு குறிப்புகள்
Advertisement