பாட்டியின் அழகு குறிப்பு | பாட்டி சொன்ன அழகு குறிப்புகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பாட்டியின் அழகு குறிப்பு பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். அந்த காலத்தில் இருந்த பெண்களும் சரி, ஆண்களும் சரி, அழகாக இருந்ததற்கு என்ன காரணம் என்று தெரியுமா.? அவர்களது உடல் மற்றும் சரும பராமரிப்புகள் தான். அதுவும் அவர்களது சரும பராமரிப்புக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்கள் தான். சரி வாங்க இவற்றில் பாட்டி சொல்லும் அழகு குறிப்பு என்னவென்று காண்போம்.
இயற்கை அழகு குறிப்புகள்:
- வெள்ளரிக்காயை வட்ட வடிவில் வெட்டிக்கொண்டு அந்த வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக அமர்ந்திருக்கவும்.
- இவ்வாறு அமர்ந்திருப்பதினால் கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்கள் நீங்கும் என்று பாட்டிகள் சொல்வார்கள்.
- இந்த முறையை தான் இப்போது அனைத்து அழகு நிலையங்களிலும் ஃபேஸ் மாஸ்க் போட்ட பின் கண்களில் வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.
முகம் பொலிவாக அழகு குறிப்புகள்:
- தினமும் முகத்தை 3 அல்லது 4 முறை குளிர்ந்த நீரால் கழுவினால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.
பருக்களை போக்க அழகு குறிப்பு:
- ஆரம்ப காலத்தில் அழகுக்கு என்று சிகிச்சைகள் இருக்காது. ஆகவே அப்போது பெண்கள் ஆவி பிடித்து தான், அழகைப் பராமரித்து வந்தார்கள்.
- எனவே முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு ஆவிப் பிடித்தால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.
ஃபேஸ் மாஸ்க் அழகு குறிப்புகள்:
- கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும்.
- அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை, மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.
முடி வளர அழகு குறிப்பு:
- தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு தடவி, 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும்.
- குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.
அழகு குறிப்பு இயற்கை டிப்ஸ்:
- கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும்.
இயற்கை அழகு குறிப்பு டிப்ஸ்:
- சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.
எலுமிச்சை அழகு குறிப்புகள் :
- பாட்டிகள் சொல்வதில் தவறாமல் கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானவை எலுமிச்சையை தலைக்கு பயன்படுத்துவது தான்.
- ஏனெனில் எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், தலையானது சுத்தமாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.
உதடு பராமரிப்பு அழகு குறிப்பு:
- உதடுகள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருப்பதற்கு லிப்-பாம்களை பயன்படுத்தாமல், சிறிது நெய்யை தடவி வந்தால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
கை கால் முடி உதிர அழகு குறிப்புகள்:
- கைகள் மற்றும் கால்களில் வளரும் முடியை எடுப்பதற்கு, வாக்ஸிங் செய்வோம்.
- அவ்வாறு வலியை உண்டாக்கும் வாக்ஸிங்கை செய்வதற்கு பதிலாக, தினமும் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கால்களுக்கு கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து பின் குளிக்க வேண்டும்.
- இதனை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் கைகள் மென்மையாக, முடியின்றி இருக்கும்.
- இதனால் தான் நமது பாட்டிகளின் கைகள் மற்றும் கால்களில் முடி இல்லாமல் இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் காணப்படுகின்றனர்.
முகத்தில் கரும்புள்ளிகள் மறைய :
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு பாட்டி வைத்தியத்தின் ஆரோக்கியமான முறையில் திருநீற்று பச்சிலை அரைத்து தினமும் 15 நிமிடம் முகத்தில் தடவி குளித்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
மூக்கில் வெள்ளை புள்ளிகள் மறைய :
முகத்தில் இருக்கும் வெள்ளை புள்ளிகள் மறைய தேன் , பால் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து தினமும் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
இன்னொரு முறையான தேங்காய் எண்ணெய் மற்றும் காபி தூள் ஆகியவற்றை சேர்த்து தினமும் 15 நிமிடம் முகத்தில் தடவி குளித்து வந்தால் முகத்தில் இருக்கும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
எண்ணெய் வடிதலை தடுக்க :
முகத்தில் எண்ணெய் வடித்தலை தடுப்பதற்கு இயற்கை முறையான பாசிப்பயிறு, கடலை மாவு , பன்னீர் ஆகியவற்றை வாரம் 2 முறை குளித்து வருவதன் மூலம் முகத்தில் எண்ணெய் வடித்தலை தடுக்கலாம்.
| இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |














