பெண்கள் முடி அடர்த்தியாக வளர
முடி அடர்த்தியாக வளர உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து Hair பேக் தயார் செய்வது எப்படி என்று இன்றைய அழகுக்குறிப்பு பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். நீங்கள் எத்தனையோ வகையான Hair பேக் கடையில் காசு கொடுத்து வாங்கி முயற்சி செய்து இருப்பீர்கள். இனிமேல் நீங்கள் எந்த விதமான செலவும் இல்லாமல் வெறும் பாசி பயிறு மட்டும் வைத்து Hair பேக் தயார் செய்து நீங்களே ஆச்சரிப்படும் அளவிற்கு முடியை அடர்த்தியாக வளர செய்யலாம். மேலும் அந்த Hair பேக் தயார் செய்யும் முறை மட்டும் அப்ளை செய்யும் முறை பற்றி விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ 2 நாட்களில் முகம் மட்டுமில்லை உடல் முழுவதும் ஜொலிக்க வைக்கலாம்
Pasi Payaru Hair Pack in Tamil:
தேவையான பொருட்கள்:
- பாசி பயிறு- 2 ஸ்பூன்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- பூந்தி கொட்டை- 2
ஹேர் பேக் செய்வது எப்படி.?
முதலில் நீங்கள் 2 பூந்தி கொட்டை, 2 ஸ்பூன் பாசி பயிறு மற்றும் 2 ஸ்பூன் வெந்தயம் ஆகிய மூன்றையும் தனி தனி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைத்து விடுங்கள்.
நீங்கள் ஊற வைத்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஊறிய பிறகு அதில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி விடுங்கள்.
இப்போது ஊற வைத்துள்ள பூந்தி கொட்டையின் மேல் இருக்கும் தோலினை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு வெந்தயம் மற்றும் பாசி பயிரினை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து விடுங்கள்.
உங்களுடைய தலை முடிக்கு பாசி பயிறு ஹேர் பேக் தயாராகிவிட்டது.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
அப்ளை செய்யும் முறை:
இப்போது உங்களுடைய தலையில் வழக்கம் போல் எண்ணெயை தடவி கொள்ளுங்கள். அதன் பிறகு தயார் செய்த ஹேர் பேக்கை தலையில் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து 10 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு வழக்கம் போல் தலை குளித்து விடுங்கள்.
இது மாதிரி வாரம் ஒரு முறை செய்தால் போதும் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முடி அவ்வளவு அடர்த்தியாக வளர்ந்து இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ இளமை குறையாமல் என்றென்றும் முகம் அழகாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க ..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |