வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2 நாட்கள் மட்டும் இதை தடவினால் போதும் பாதவெடிப்பு மாயமாய் மறைந்துவிடும்..!

Updated On: August 9, 2024 12:15 PM
Follow Us:
Patha Vedippu Home Remedy in Tamil
---Advertisement---
Advertisement

Patha Vedippu Home Remedy

இந்த பாத வெடிப்பு பிரச்சனை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே இருக்கிறது. ஆனால் ஆண்களை விட பெண்களுக்குத் தான் பாத வெடிப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்த பாத வெடிப்பு வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெண்கள் எப்பொழுதும் தண்ணீரில் நின்று வேலைபார்ப்பது தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

பெண்களும் இந்த பாத வெடிப்பை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் இரசாயனம் சேர்க்கப்பட்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாம் இந்த பாத வெடிப்பை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அது எப்படி இன்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பாதங்களை தண்ணீரில் ஊறவைக்கவும்:

பாதங்களை தண்ணீரில் ஊறவைக்கவும்

முதலில் உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை மறைய செய்வதற்கு நீங்கள் ஒரு பக்கெட்டில் போதுமான அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்.

பின் அந்த தண்ணீரில் 1 எலுமிச்சை பழத்தின் சாறு, சிறிதளவு கல் உப்பு மற்றும் வினிகர் இருந்தால் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் உங்கள் பாதங்களை அந்த நீரில் 20 நிமிடம் ஊறவைக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து உங்கள் பாதங்களை சொரசொரப்பான இடத்தில் அல்லது சொரசொரப்பான கல்லை கொண்டு பாத வெடிப்பு இருக்கும் இடத்தில் நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். பின் உங்கள் பாதங்களை கழுவி ஈரம் இல்லாமல் சுத்தமாக துடைக்க வேண்டும்.

2 நாட்களில் உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை மறைய வைப்பதற்கு இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Patha Vedippu Home Remedy in Tamil: 

Patha Vedippu Home Remedy

  1. வேப்ப எண்ணெய் – 2 ஸ்பூன்
  2. மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவிற்கு வேப்ப எண்ணெயை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளுங்கள்.

இது இரண்டையும் நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும். பின் இதை உங்கள் பாதங்களில் வெடிப்பு இருக்கும் இடங்களில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

இந்த முறையை நீங்கள் தூங்கும் முன் செய்யலாம். அல்லது பகல் நேரத்தில் இதுபோல செய்து 30 நிமிடம் வைத்திருந்து பின் காலை கழுவி கொள்ளலாம். இதுபோல நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் 1 வாரத்தில் பாத வெடிப்பு மறைவதை நீங்களே காண்பீர்கள்.

3 நாட்களில் பாதவெடிப்பு முற்றிலும் மறைய இந்த 3 பொருள் மட்டும் போதும்..!
பாத வெடிப்பு, குழி நகம் உடனே மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

 

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைய சில டிப்ஸ்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை