Permanent Solution for Dandruff at Home in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் தலையில் உள்ள பொடுகு பிரச்சனை தான். இந்த பொடுகினால் நமது தலைமுடியும் அதிகமாகவே உதிர்கிறது. பொதுவாக பொடுகை அழிக்க முடியாது ஆனால் அதனை உருவாக்கக்கூடிய கிருமிகளை அழிக்க முடியும். அப்படி பொடுகை உருவாக்கக்கூடிய கிருமிகளை எவ்வாறு அளிப்பது என்பதற்கான சில டிப்ஸ்களை பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Remove Dandruff Permanently in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- சின்ன வெங்காயம் – 10
- கடுகு எண்ணெய்(Mustard Oil) – 2 டீஸ்பூன்
- ஆமணக்கு எண்ணெய் – 2 டீஸ்பூன்
- வேப்ப எண்ணெய் – 2 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
முதலில் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள 10 சின்ன வெங்காயங்களை தோலை நீக்கிவிட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய், 2 டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய், 2 டீஸ்பூன் வேப்ப எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.
இதையும் படித்துபாருங்கள்=> நிரந்தரமாக பொடுகு தொல்லை நீங்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்
பின்னர் அதனை உங்களின் தலையில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்த பிறகு தலைக்கு குளியுங்கள்.
இதனை வாரத்திற்கு மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் ஒரே மாதத்தில் உங்கள் தலையில் உள்ள பொடுகு நீங்கி தலைமுடி நன்கு வளர்வதை நீங்களே காணலாம்.
How to Remove Dandruff Quickly in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- ஆரஞ்சி தோல் பொடி – 2 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
- வேப்பிலை பொடி – 2 டீஸ்பூன்
மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் தலையில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.
இதையும் படித்துபாருங்கள்=> பொடுகு பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாக வளர அட்டகாசமான டிப்ஸ் உங்களுக்காக
இதனை வாரத்திற்கு மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் ஒரே மாதத்தில் உங்கள் தலையில் உள்ள பொடுகு நீங்கி தலைமுடி நன்கு வளர்வதை நீங்களே காணலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |