ஒரே நாளில் முகப்பரு நீங்க | Pimples Poga Tips in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய அழகு குறிப்பு பகுதியில் ஒரே நாளில் முகப்பரு போவதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம். முகப்பரு ஆண்கள், பெண்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் எல்லோருக்கும் வர ஆரம்பித்து விட்டது. முகத்தில் அதிக அளவு எண்ணெய் இருந்தால் அல்லது சுற்று சூழலில் ஏற்படும் மாசு காரணமாக பரு உருவாகலாம். இப்படி வரும் முகப்பருக்கள் மறையும்போது சருமத்தில் தழும்பை ஏற்படுத்தி அழகை கெடுத்து விடுகிறது. நாமும் இந்த பரு போவதற்காக பல கிரீம்களை தடவி இருப்போம், ஆனால் அதற்கான பலன் மட்டும் கிடைத்திருக்காது. கிரீம்களை அதிகம் பயன்படுத்தினால் பின்னாளில் பக்க விளைவுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகப்பருக்களை நீக்குவது சிறந்தது. அந்த வகையில் இந்த தொகுப்பில் இயற்கையான முறையில் சருமத்தில் உள்ள முகப்பருக்களை எப்படி நீக்குவது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- வேப்பிலை – சிறிதளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- மஞ்சள் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு வேப்பிலை, 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள், நறுக்கிய கற்றாழை 1 சேர்த்து 5 – 7 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும். கொதித்த பிறகு அதை ஆவி (Streaming) பிடிக்கவும்.
- அதற்கு பின்னர் விரலி மஞ்சளை சிறிய துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.
- பின்னர் ஊறவைத்த மஞ்சள் மற்றும் வேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் இதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் அழகாகிவிடும். மஞ்சளில்
தேவையான பொருட்கள்:
- கற்றாழை – 1
செய்முறை:
- 1 கற்றாழையை தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பின் இந்த ஜெல்லை இரவு உறங்குவதற்கு முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவி விடவும்.
- கற்றாழை ஜெல்லில் ஆக்ஸினேற்ற மற்றும் ஆன்டி செப்டிக் பண்புகள் இருப்பதால் இது முகப்பருவை அழிப்பதற்கும், பரு வராமல் இருப்பதற்கும் உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- ஆரஞ்சு தோல் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
- பால் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- ஒரு பௌலில் ஆரஞ்சு தோல் பொடியை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். பின் அதில் தேன் 1 டேபிள் ஸ்பூன், பால் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் ஆக்கி கொள்ளவும்.
- பிறகு காட்டன் பஞ்சை வைத்து முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் காயவைத்து பின்னர் முகத்தை கழுவவும்.
- ஆரஞ்சு தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் இறந்த செல்களை புதுபிப்பதற்கும், முகப்பரு வராமல் தடுக்கவும் உதவியாக இருக்கும்.
மூன்றே நாளில் முகப்பருவிற்கு உடனடி தீர்வு..! |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |