பொடுகு பிரச்சனையை சரி செய்வதற்கு எந்த வித இயற்கை குறிப்புகளையும் அப்ளை செய்ய தேவையில்லை.! இதை மட்டும் பண்ணுங்க ..!

Advertisement

பொடுகு பிரச்சனை நீங்க

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் பொடுகு பிரச்சனையை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். பொடுகு பிரச்சனையை சரி செய்வதற்காக பல குறிப்புகளை பயன்படுத்திருப்போம். கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்கள் மற்றும் இயற்கை முறையிலும் சரி செய்வதற்கு குறிப்புகளை பயன்படுத்திருப்பீர்கள். ஆனால் அந்த குறிப்புகள் எல்லாம் சரி ஆக தான் இருக்கும். அதில் சின்ன மாற்றத்தை செய்தலே பொடுகு பிரச்சனை சரி ஆகிவிடும். அது என்ன என்று இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ பொடுகு பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாக வளர அட்டகாசமான டிப்ஸ் உங்களுக்காக..!

பொடுகு பிரச்சனை தீர:

பொடுகு பிரச்சனைக்காக பல குறிப்புகளை பயன்படுத்தி எந்த Improvement இல்லை என்று கவலைப்படுகிறீர்களா..! நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். அன்றாட வாழ்க்கையில் செய்யும் சில செயல்களில் மாற்றத்தை ஏற்படுத்தினாலே போதும்.

பொடுகு இருப்பவர்கள் தலை குளிக்கும் போது தலையை சுரண்டி குளிக்க வேண்டும். அதாவது தலை அரிக்கிறது என்றால் சொறிவோம் அல்லவா.! அது போல் தேய்த்து குளிக்க வேண்டும்.

உங்களால் கையில் தேய்க்க முடியாது என்றால் ஆண்கள் தலை சீவ பயன்படுத்தும் வட்டமான சீப்பை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் தலைக்கு பயன்டுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலையை தேய்த்து அலசி விடுங்கள். பிறகு ஆண்கள் பயன்படுத்தும் வட்டமான சீப்பை வைத்து உங்களின் தலை முடியை ஒவ்வொரு பகுதியாக எடுத்து நன்றாக சொரண்டி தண்ணீர் ஊற்றி அலசுங்கள்.  இப்படி குளிக்கும் போது தலையில் உள்ள பொடுகு உதிர்ந்து விடும். 

முக்கியமாக பொடுகு வருவதற்கு காரணம் நீங்கள் தலைக்கு எண்ணெய் வைத்து விட்டு வெளியே செல்வீர்கள். அப்பொழுது காற்று மாசுபாடு  உங்களின் தலைமுடியில் சேரும். அப்போ அந்த காற்று மாசுபாடு அழுக்காக மாறி உங்களின் தலையில் பொடுகை உண்டாக்குகிறது. அப்படியென்றால் தலைக்கு எண்ணெய் வைக்க கூடாது என்று சொல்கிறீர்களா என்று நினைக்க கூடாது. தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும் தான் ஆனால் வழிய வழிய எண்ணெய் வைக்காதீர்கள். முடிந்தவரை வெளியில் செல்லும் போது அதிகமாக எண்ணெய் வைப்பதை தவிர்த்திடுங்கள். 

இதையும் படியுங்கள் ⇒ பொடுகு வர காரணம் மற்றும் அதனை எப்படி தடுப்பது சூப்பர் ஐடியா.!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami

 

Advertisement